உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதையில்லா தமிழ்நாடு போட்டிகள் அறிவிப்பு

போதையில்லா தமிழ்நாடு போட்டிகள் அறிவிப்பு

சென்னை : அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, 'போதையில்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில், விழிப்புணர்வு ரீல்ஸ், போஸ்டர் டிசைனிங் மற்றும் மீம்ஸ் மேக்கிங் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தங்களது கற்பனையில் உருவாக்கிய படைப்புகளை, நவ., 15ம் தேதிக்குள், 'gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டியில் தேர்வாகும் சிறந்த படைப்பாளர்களுக்கு, அமைச்சர் சாமிநாதன் பாராட்டு சான்றிதழ் வழங்குவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை