தோல்வி பயத்தில் திட்டங்கள் அறிவிப்பு
ககன்தீப்சிங் பேடி, ராதாகிருஷ்ணன் என, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, சொந்த கட்சிக்கு வேலை வாங்கி வருகின்றனர். அவர்களை கட்சி வேலைக்கு பயன்படுத்தி வருவது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழக பள்ளி மாணவர்களின் கல்வித் திறன், பின்னோக்கி செல்வதாக ஆய் வறிக்கை வந்துள்ளது. தமிழகத்தில், வட மாநிலங்களை சேர்ந்தவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்து, ஆட்சியை பிடிக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின், முதியோரின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை ஏன் செயல்படுத்த வேண்டும்? வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளில் தோற்கும். தோல்வி பயத்தில் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். - நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,