உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அறிவுப்பூர்வமானது: முதல்வர் ஸ்டாலின்

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அறிவுப்பூர்வமானது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல!,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹிந்தித் திணிப்பை முறியடிக்க தி.மு.க.,வும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zs2rvfck&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பா.ஜ., தாங்கள் ஆட்சி செய்யும் மஹாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். ஹிந்தித் திணிப்புக்கு எதிராகச் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. கூட்டத்தில் ராஜ்தாக்கரே, எழுப்பிய கேள்விகளுக்கு, ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன். https://x.com/mkstalin/status/1941471786136424508 மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழகத்தைப் பழிவாங்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல!ஹிந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை ஹிந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், 'ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும்' என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்! தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழகத்துக்கும் பா.ஜ., செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ., பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R.MURALIKRISHNAN
ஜூலை 05, 2025 23:17

உமது அப்பனும் சொரியானும் தமிழக மக்களுக்கு செய்த துரோகம் கொஞ்சமல்ல. ஒழிக திமுக இல்லையில்லை அழிக திமுக, மிளிர்க தமிழ்நாடு. வரும் தேர்தல் திமுகவின் கடைசி தேர்தல்


Ramesh Sargam
ஜூலை 05, 2025 22:44

திருபுவனம் அவலத்தை, அராஜகத்தில் அவ்வளவு எளிதாக மறந்துவிட்டு, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி பேசுகிறாரே, இவருக்கு போன உயிரின் மீது சிறிதளவேனும் மனிதாபிமானம் இருக்கிறதா, இறந்தவர் குடும்பத்தினர் மீது கருணை என்பது இருக்கிறதா?


Bhakt
ஜூலை 05, 2025 19:41

அறிவுறு இருந்து இருந்தா அறிவுப்பூர்வமா ஆக்கபூர்வமா செயல்படுவீரே


GMM
ஜூலை 05, 2025 19:29

இஸ்லாமியர் உருது தன் மத இணைப்பு மொழி மற்றும் கிறித்துவ மத ஆங்கில இணைப்பு மொழி ஆக்கிவிட்டனர்.? இவைகள் பாரத மொழிகள் அல்ல. தேசிய அளவில் ஒரு இணைப்பு மொழி தேவை. பெரும்பாலும் மக்கள் பேசிய இந்தி தேர்வு செய்தது காங்கிரஸ். அப்போது பிஜேபி இல்லை? மராத்தி இந்தி வரி வடிவம். அங்கு இந்தி எதிர்பை மக்கள் விரும்ப மாட்டார்கள். ?காங்கிரஸ் தான் இந்தியை 3 மொழி கொள்கையில் கட்டாயம் ஆக்கியது. பிஜேபி 3 மொழி கொள்கையில் ஒருவர் தாய் மொழி, மாநில மொழி மற்றும் ஆங்கிலம். இந்தி கட்டாயம் இல்லை. இந்தியை இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு துவங்க கல்வியில் மட்டும் பயன்படுத்த முடியும். நாட்டில் இணைப்பு மொழி இல்லை என்றால் அந்நியர் ஆக்கிரமிக்க வாசல் இல்லாத வீடு போல் நம் நாடு ஆகும்.


Kulandai kannan
ஜூலை 05, 2025 19:22

இந்தியா போன்ற பலமொழி பேசும் நாட்டிற்கு ஒரு இணைப்பு மொழி அவசியம். அதுதான் ஆங்கிலம் என்று ஜல்லியடிக்க வேண்டாம். தமிழகத்தில் 0.01 சதவீத மாணவர்களுக்குக் கூட ஆங்கிலம் பேச, எழுதத் தெரிவதில்லை.


ராம் சென்னை
ஜூலை 05, 2025 18:53

சொல்லிட்டார்யா விஞ்ஞானி. இவருக்கு யாராவது எழுதி கொடுத்தாலும் பேசத் தெரியாது எத்தனை காலம் இந்தி வச்சு மக்களை ஏமாத்திட்டு இருக்க போறீங்க நீங்க பண்ற தப்பை மறைப்பதற்கு இல்லாத விஷயத்தை எல்லாம் சொல்லி மக்களை திசை திருப்ப வேண்டும், அதற்கு டிவி ஊடகமும் உங்களுக்கு உடந்தை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை