உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுக்களை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரியும் மனுத் தாக்கல் செய்தனர். கரூர் சம்பவம் தொடர்பான இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, இருவருக்கும் முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t4gxc5km&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று மாலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பொதுச்செயலர் ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விசாரணை துவக்க நிலையிலேயே உள்ளது. இதனால் முன்ஜாமின் வழங்க முடியாது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியை கொண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kulandai kannan
அக் 04, 2025 15:22

உடனே முன்ஜாமீன் வழங்க அவர் என்ன நேரு குடும்ப அங்கத்தினரா?


R. SUKUMAR CHEZHIAN
அக் 03, 2025 22:16

நீதியரசர் மனுவை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. 41 உயிர்கள் பலியாக காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்பந்தபட்ட கட்சி தொண்டர்கள் பல இடங்களில் கட்டுபாடு இல்லாமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டனர் அவர்களையும் வீடியோவில் பாத்து உடனடியாக கைது நடவடிக்கை எடுப்பது தமிழக மக்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு நல்லது. விஜய் கட்சியை தற்காலிகமாக ஆவது தடை செய்ய வேண்டும்.


sathik
அக் 03, 2025 22:06

விழுப்புரத்தில் ஒரு அமைச்சர் கேவலமா பேசுன்னாரே


Easwar Kamal
அக் 03, 2025 19:17

மதுரை போனால் என்ன சென்னை மற்றும் டெல்லி உள்ளது. எப்போது ஆளும் கட்சி ஒருத்தரை வட்டம் அடிக்கிறதோ அப்போதே அவருடைய செல்வாக்கு yargiradhu என்று அர்த்தம். ஜாக்கிரதைaga கையாள வேண்டும். இல்லாவிட்டால் இருக்கிற இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள் இன்னும் 6 மாதம் வெளியில் வராமல் கூட செய்து விடுவார்கள்.


karthik
அக் 03, 2025 19:07

சினிமா போஸ்டர் ஓட்டிட்டு இருந்தவர்கள் எல்லாம் நாடாள ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம் தான் கரூர் சம்பவம்


ஆரூர் ரங்
அக் 03, 2025 18:47

இரு கட்சிகளுக்கும் ஒரே பைனான்சியர் குடும்பம் என்பது நாட்டிலேயே இல்லாத அதிசயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை