| ADDED : டிச 27, 2025 07:15 AM
சென்னை: 'தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும், அந்த்யோதயா ரயில், வரும் 1ம் தேதி முதல் சீர்காழியில் நின்று செல்லும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும், அந்த்யோதயா ரயில், முக்கியமான ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. முன்பதிவு இல்லாத ரயில் என்பதால், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், வழக்கத்தை விட பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கிடையே, பயணியர் கோரிக்கையை ஏற்று, வரும் ஜனவரி 1ம் தேதி முதல், சீர்காழி ரயில் நிலையத்தில், இரு மார்க்கத்திலும், தலா ஒரு நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.