உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‘மன்னிப்பு கேட்பது ஏமாற்றுவேலை’

‘மன்னிப்பு கேட்பது ஏமாற்றுவேலை’

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை: மதுரை கலெக்டர் உச்ச நீதிமன்றத்தில் ஏன் தீபம் ஏற்றப்படவில்லை என, 17 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தீபத்துாணில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகத்தால் குழு நியமிக்கப்படவில்லை என்றும், அதனால் தீபம் ஏற்ற முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கோவில் நிர்வாக குழு ஒப்புதலை பெற முயன்றதாகவும், அவர்கள் அதை ஏற்காமல், உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றியதாகவும் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவைவிட அறங்காவலர் குழுவின் கருத்து பெரிதல்ல என்பதை கலெக்டர் அறியாதவரா? திருப்பரங்குன்றம் கோவில் பட்டர் கருத்துப்படியே உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது என, கோவில் இணை கமிஷனர் செல்வி கூறியுள்ளார். ஆனால், கோவில் பட்டர்கள் எங்களிடம் கருத்து கேட்கவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறங்காவலர் குழு, பட்டர்களின் அறிக்கை என, பொய்களை கூறி அரசியல்வாதிகளின் ஆலோசனையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமரியாதை செய்துள்ளார் கலெக்டர். கடந்த ஆண்டு தி.மு.க., அரசு செய்த சதி வேலைகளை விட, தற்போதைய த.வெ.க அரசு பல சதி செயல்களையும், நாடகங்களையும் அரங்கேற்றி ஒட்டுமொத்த முருக பக்தர்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளது. சட்டத்தின் மாட்சிமையை நிலைநிறுத்த உறுதியேற்ற மதுரை கலெக்டர், தமிழக முதல்வர் ஆகியோர் தெரிந்தே சட்டத்தை அவமதித்து சட்டத்தின் மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். மதுரை கலெக்டரின் தவறான செயலுக்கு தக்க தண்டனையை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை