உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைக்கம் விருதுக்கு செப்டம்பர் 10க்குள் விண்ணப்பிக்கலாம்

வைக்கம் விருதுக்கு செப்டம்பர் 10க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை:தமிழக அரசு வழங்கும், 'வைக்கம் விருது - 2025'க்கு விண்ணப்பிக்க, அரசு தலைமை செயலர் முருகானந்தம் அழைப்பு விடுத்துள்ளார். அவரின் செய்திக்குறிப்பு: ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பணியாற்றி, பங்களிப்பை வழங்கிய, தமிழகத்தை தவிர்த்த பிற மாநிலத்தை சேர்ந்த தனி நபர் அல்லது அமைப்புக்கு, தமிழக முதல்வரால், 'வைக்கம் விருது' வழங்கப்படும் . இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தேவையான ஆவணங்களை இணைத்து, 'தமிழக அரசு, பொதுத்துறைச் செயலர், தலைமை செயலகம், சென்னை - 600009' என்ற முகவரிக்கு, செப்டம்பர், 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தபால் தவிர்த்து பிற வழிகளில் வரும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பணியாற்றியதற்காக, மாவட்ட கலெக்டரின் பரிந்துரையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விருது பெறுபவர் களுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ