உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சட்ட ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை : தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில், ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அம்பேத்கர் சட்டப் பல்கலையில், 2021 - 22ம் கல்வியாண்டில், சட்ட ஆராய்ச்சியை ஊக்குவிக்க, 132 மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் அனுமதிக்கப்பட்டனர். வரும் கல்வியாண்டில் ஆராய்ச்சி படிப்பில், 96 காலியிடங்களுக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு, www.tndalu.ac.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 29ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, பல்கலை பதிவாளர் கவுரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி