உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலியிடம் இல்லாத பள்ளிகளுக்கு நியமனம்: புதிய பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு 

காலியிடம் இல்லாத பள்ளிகளுக்கு நியமனம்: புதிய பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காலிப்பணியிடங்கள் இல்லாத அரசு பள்ளி களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப் பட்டு, அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தினத்தன்று, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், துணை முதல்வர் உதயநிதி, 2,810 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியாணைகளுடன், சமீபத்தில், அவர்களுக்கான பள்ளிகளில் பணியில் சேர சென்றனர். ஆனால், பணியிடம் காலி இல்லை என்றும், பள்ளியில் சேர்ப்பதற்கான ஆணை கிடைக்கவில்லை என்றும், தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், புதிய ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: கடந்த, 2023ல் நடந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பல்வேறு வழக்குகளை சந்தித்து, நீதிமன்ற உத்தரவால் பணியாணை பெற்றனர். ஆனால், பணியில் சேர வந்த நாளிலேயே, காலிப்பணியிடம் இல்லை என, தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர். ஏற்கனவே பொது கலந்தாய்வு வாயிலாக, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு, அதற்கான பட்டியலும் பெறப்பட்டு விட்டது. இதனால், காலிப்பணி யிடம் எங்கெங்கு உள்ளது என்பது, அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். இருந்தும், எதை எதிர்பார்த்து, இவ்வாறான குளறுபடிகளை செய்தனர் என்பது தெரியவில்லை. ஒரு வழியாக, தற்போது தான் காலிப்பணியிடம் உள்ள பள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு கிடைத்து விட்ட சந்தோஷத்துக்கு பதில், தாங்கள் தேர்வு செய்த ஊரும், பள்ளியும் கைநழுவி போனதால் கவலை அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
செப் 15, 2025 08:41

Employment office க்கு போங்க இன்னும் மோசடியும் குளறுபடியும் வெளியில் வரும் சாமி. ரெஜிஸ்டர் பண்ணத காணோம்னு புதுசா ரெஜிஸ்டர் பண்றாங்க, அங்க வரவேண்டாம்னு சொல்றாங்க. ஆன்லைன்ல பண்ணா ஒப்பனே ஆகா மாட்டேங்குது.


சமீபத்திய செய்தி