உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு

நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு

சென்னை: உணவுத்துறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.இதுகுறித்த தமது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது; கடந்த 2024 ஜூன் மாதம் ரேஷன் துறையில் போக்குவரத்து டெண்டரில் சந்தை மதிப்பை விட 107% அதிகமான தொகைக்கு டெண்டர் வழங்கியதன் மூலம் ரூ 992 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.இந்த டெண்டர் வழங்குவதற்காக பல சட்டங்களை உடைத்தும், வளைத்தும் மத்திய மற்றும் மாநில அரசு பொது ஊழியர்கள் வேலை செய்துள்ளார்கள். இதுகுறித்த 40 பக்க புகார் மற்றும் 565 பக்க ஆதாரங்களை அறப்போர் இயக்கம் சார்பில், சி.பி.ஐ, மாநில லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, முதல்வர் ஸ்டாலின், மத்திய மற்றும் மாநில உணவுத்துறை அமைச்சர்கள், உணவுத்துறை செயலர்கள், உணவு ஆணையக இயக்குனர், மாநில நிதித்துறை செயலர் என அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை நேரடி கொள்முதல் மையத்தில் அரசு கொள்முதல் செய்த பின்னர், அதனை சேமிப்பு மையத்திற்கு அனுப்பவும், ரயிலுக்கு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பவும், பின்பு நெல்லை அரிசியாக மாற்றி அதனை தாலுகா கொள்முதல் மையங்களுக்கு எடுத்துச் செல்லவும் ஜூன் 2023ல் ரேஷன் துறை போக்குவரத்து 38 மாவட்டங்களுக்கும் சேர்த்து டெண்டர் விட்டது. இந்த டெண்டர்கள் முருகா என்டர்பிரைசஸ், கந்தசாமி அண்ட் கோ மற்றும் கார்த்திகேயா என்டர்ப்ரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் சந்தை மதிப்பை விட 107% மேலான விலையில் டெண்டர் வழங்கப்பட்டு, அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி அளவில் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அறப்போர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

spr
மார் 11, 2025 19:13

"இந்த டெண்டர் வழங்குவதற்காக பல சட்டங்களை உடைத்தும், வளைத்தும் மத்திய மற்றும் மாநில அரசு பொது ஊழியர்கள் வேலை செய்துள்ளார்கள்." இதுதான் உண்மை அரசியல்வியாதிகளுக்கு முரட்டுத் துணிச்சல் இருக்கும் ஆனால் மூளை வேலை செய்யாது அவர்களுக்கு ஆலோசனை சொல்லிக் கொடுப்பது அரசு அதிகாரிகளும், வங்கி மற்றும் பட்டையக் கணக்காளர்கள் மட்டுமே. தப்பித் தவறி இதுபோலக் குற்றம்.சாட்டப்பட்டால் அவர்களைத் தப்புவிக்க வழக்கறிஞர்களும் காவற்துறை அதிகாரிகளோடு சில நீதிபதிகளும் உதவுகிறார்கள் மோடி அரசால் இதுவரையில் எந்தொவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை ஊடகங்களுக்கு இது ஒரு விற்பனையை அதிகரிக்க உதவும் செய்தி மட்டுமே. கனடா நாட்டு மக்களை போல இந்த நாட்டு மக்களும் அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த நிலை மாறும்


Mecca Shivan
மார் 11, 2025 19:06

கிஸ்தி அலுவலகங்கள் கிஸ்தி அலுவலகங்களாக செயல்படுகின்றன ..லஞ்சம் லஞ்சம். ..அதிலும் வட இந்தியர்கள் ஒரு குரூப்... தமிழர்கள் ஒரு குரூப்...


Srinivasan Ramabhadran
மார் 11, 2025 18:56

எவ்வளவு புகார்கள், ஆதாரத்துடன் இருந்தாலும், அரசியல்வாதிகள் மேல் எந்த நடவடிக்கையும் இருக்காது. சாமானிய மக்கள் இந்த செய்திகளை ஒரு பொழுதுபோக்கு விஷயமாக படித்து விட்டு அடுத்த ஊழல் செய்திக்காக காத்திருக்க வேண்டும். இப்பொழுது வெளி வந்துள்ள ஊழல் செய்திக்கு ஆளும் அரசு எந்த ஒரு பதிலும் கொடுக்காது. மாறாக இது பொய் பிரச்சாரம் என்று கூறுவார்கள்.


Raj
மார் 11, 2025 18:01

மொத்தத்தில் எங்கும் எதிலும் ஊழல் தான். மக்கள் வரிப்பணம் எல்லாம் மந்திரியின் வங்கிக்கணக்கில்.


P.Sekaran
மார் 11, 2025 17:35

அறப்போர் இயக்கம் அவ்வபொழுது புகார் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் எதுவும் நீதி துறை எடுத்ததாக தெரியவில்லை. தானாக இந்த புகாரை நீதித்துறை ஏன் எடுத்துக்கொள்ள வில்லை. எல்லாமே சந்தேகமாக இருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்கிறார்கள் அந்த பழமொழி உண்மைதான் என்று எண்ண தோன்றுகிறது.


N Annamalai
மார் 11, 2025 16:40

இன்னும் தோண்டலாம் .முடிவு பூஜ்யம் .


ஆரூர் ரங்
மார் 11, 2025 16:12

சாக்கடை நாறும். உடல்நலத்துக்கு ஆபத்து என்பதெல்லாம் ஒரு செய்தியா?


VSMani
மார் 11, 2025 16:06

சட்டங்களை உடைப்பதும் , வளைப்பதும் திமுக வின் கைதேர்ந்த கலை. கடவுள் இல்லை என்பார் ஆனால் முருகா கந்தா கார்த்திகேயா என்ற பெயரில் டெண்டர் எடுத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பர். ஊழல் = திமுக ஊழல்களின் மொத்த உருவம் திமுக மற்றும் அதிமுக. ஒரு மாற்று அரசியல் வந்தால்தான் திமுக மற்றும் அதிமுக வின் ஊழல்களை சல்லடை போட்டு அரித்து நடவடிக்கை டுக்க முடியும். இந்த திமுக மற்றும் அதிமுக எத்தனையோ ஆயிரம்கள் கோடிகள் பணத்தை கொள்ளையடித்தாலும் தாங்குதே தமிழ்நாடு


RAVINDRAN.G
மார் 11, 2025 15:04

எல்லாமே ஊழல் பெருச்சாளிகள்தான்.அவர்களின் ஆட்சி வரும்போது அவர்களும் கொள்ளையடிப்பார்கள். ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை அற்றுப்போய் வெகுநாள் ஆகிவிட்டது.


Ramu
மார் 11, 2025 13:49

நாம் தமிழர் போன்ற கட்சி வந்தால் தான் நாடு உருப்படும்.


சமீபத்திய செய்தி