உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதற்கெதற்கு 90 கோடி; இந்தா பிடி, காப்பி பொடி; அறப்போர் இயக்கம் தடாலடி!

இதற்கெதற்கு 90 கோடி; இந்தா பிடி, காப்பி பொடி; அறப்போர் இயக்கம் தடாலடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறை தூங்கி வழிவதாகக் கூறி, அறப்போர் இயக்கத்தினர் காப்பி பொடியை அனுப்பி வைத்து நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் எந்த அரசுத்துறையை எடுத்துக் கொண்டாலும், அதில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. லஞ்சத்தால் பாதிக்கப்படுபவர்கள் புகார் மூலமாகவும், சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் பதிவு செய்து இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர். அதன்பேரில், லஞ்சம் வாங்கிய எத்தனையோ அதிகாரிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இப்படியிருக்கையில், தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறையினர் சரியாக செயல்படவில்லை என்றும், செயலிழந்து கிடக்கும் துறைக்கு ஆண்டுக்கு ரூ.90 கோடியை ஒதுக்கலாமா? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக கடந்த 12ம் தேதி அறப்போர் இயக்கம் தனது வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் பணத்தில் செயல்படும் ஒரு அரசு துறை தங்களுக்கு கொடுக்கப்பட்ட எந்த ஒரு வேலையையும் செய்யாமல் சும்மா இருக்கும் போது மக்களாகிய நாம் தான் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் சமுதாயமாக மாறினால் மட்டுமே நம்முடையை குரலுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பயம் வரும். கேள்வி கேட்க வாருங்கள். ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில்,' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், ஊழல் புகார்களை விசாரிக்காமல், ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல், ஊழல்வாதிகளை காப்பாற்றும் தி.மு.க., அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையை தூக்கத்தில் இருந்து எழுப்ப காப்பி கொடுக்கலாம் வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, இன்று ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறையினருக்கு, காப்பி பொடியை அறப்போர் இயக்கத்தினர் அனுப்பி வைத்தனர். மேலும், செயலிழந்து போன துறைக்கு இத்தனை கோடிகளை ஒதுக்குவதற்கு பதிலாக, ஆக்டிவாக இருக்கும் மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கு இந்த நிதியை ஒதுக்கினால் கூட பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.இந்த ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் வெறும் 72 வழக்குகளும், சென்னையில் வெறும் 4 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் தமிழக அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை விபரம்2019 - 281 வழக்குகள்2020 - 249 வழக்குகள்2021 - 248 வழக்குகள்2022 - 131 வழக்குகள்2023 - 141 வழக்குகள் 2024 - 72 வழக்குகள்சென்னையில் கடந்த 6 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை விபரம்2019 - 55 வழக்குகள்2020 - 49 வழக்குகள்2021 - 27 வழக்குகள்2022 - 26 வழக்குகள்2023 - 18 வழக்குகள் 2024 - 4 வழக்குகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

swamy chandiran
செப் 16, 2024 17:36

அரபோற போல நாலு பேர் வந்து, அப்புறம் நாலு பேரை மிரட்டி காசு பங்கிடுவாங்க. இதான் இந்த நாட்ல நடக்கும்.


R.RAMACHANDRAN
செப் 16, 2024 13:42

சுதந்திர இந்தியா என்ற பெயரில் நேர்மையானவர்களை ஒடுக்கவும் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றவும் அனைத்து அதிகார அமைப்புகளுக்கும் உச்ச நீதிமன்றம் உட்பட ஆண்டுக்கு லட்சக் கணக்கான கோடிகள் செலவு செய்யப்படுகிறது.அவர்கள் மக்களுக்கு சேவை செய்யும் ஊழியர்கள் என்பதை மறந்து எஜமானர்கள் போல செயல்படுகின்றனர்.


Ramakrishnan
செப் 16, 2024 12:21

பாய், தலையணை கூட முதல்வர் அலுவலகம் மூலம் அனுப்பலாம். முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறை தான் இது. எங்கள் ஆட்சியில் ஊழலே இல்லை என்று புள்ளி விவரம் கூறுவதற்காகத் தான் இந்த ஏற்பாடு. ஒவ்வொரு அரசு அலுவலகத்தை அணுகும் பொது மக்கள் அனைவரையும் கேட்டால் காரி உமிழ்வார்கள்.


Barakat Ali
செப் 16, 2024 11:36

இந்த அறப்போர் இயக்கமும் டீம்காவின் இளைஞர் அணியும் ஒண்ணுதான் ....... இவங்க எப்படி ஊழலை எதிர்ப்பாங்க ? இதுல ஏதோ ஜ்ஜ்ஜ்ஜூது இருக்கு ..........


V GOPALAN
செப் 16, 2024 17:52

பரகத் பாக்கிஸ்தான் அலி கும்பல்தான் தீ மூ க ஊழலுக்கு காரணம் அறப்போர் இயக்கம் பற்றி பேசுவதற்கு போண்டற திருடன் பேசக்கூடாது


Ganapathy Subramanian
செப் 16, 2024 10:59

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் எல்லோரும் திருந்தி விட்டனர், நேர்மையாக நடந்து கொள்ளுகின்றனர். நம்புங்கப்பா, சிரிக்காதீங்க.


sridhar
செப் 16, 2024 10:55

எல்லா அரசு அலுவலங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது . பத்திர பதிவு , RTO , tahsildar அலுவலகங்களில் தினமும் லட்சக்கணக்கில் பணம் லஞ்சமாக மாறுகிறது . பிடிக்க மனம் இல்லை .


P.Sekaran
செப் 16, 2024 10:16

யோகி ஆதியநாத் செய்தது போல இங்குள்ள தமிழக ஊழியர்கள் தங்களுடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஆன் லைனில் பதிவு செய்ய சொன்னால் யார் யார் ஊழலில் மூழ்கியவர்கள் என்று தெரியும் மேலும் ஊழல் என்று சொன்னால் நிறைய பேர் அரசியல் வாதிகள் மாட்டுவார்கள். இங்குள்ள ஊழல் செய்த அரசியல்வாதியை காபந்து செய்வதில் அக்கரை காட்டுகிறார்கள். இதற்கே அவர்களுக்கு வேலை சரியாக இருக்கிறது. மேலும் ஊழலை ஒழிக்கும் அரசு ஊழியர்கள் அவர்களுடன் சேர்ந்து பணம் வாங்கி கொள்கின்றனர். இதில் ஏமாந்தவர்கள் சாதாரண மக்கள் தான்.


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 08:58

லஞ்சம், ஊழல் தலையை விரிச்சுக்கிட்டு ஆடுது ???? நம்ப முடியலீங்களே ????


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 10:45

ஆளும் நாட்டில் லஞ்சம், ஊழல் தலையை விரிச்சுக்கிட்டு ஆடுது ???? நம்ப முடியலீங்களே ????


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 11:32

56"


sankaranarayanan
செப் 16, 2024 08:45

லஞ்சம் ஒழிப்புத்துறை என்பதற்கு பதிலாக லஞ்சம் ஆதரிக்கும் துறை என்றே பெயர் வைக்கலாம் பொருத்தமாகத்தான் இருக்கும்


Mahendran Puru
செப் 16, 2024 08:15

செய்திகளை விட வாசகர் கருத்துக்கள் நல்ல நகைச்சுவை.


முக்கிய வீடியோ