மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
16 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
27 minutes ago
வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை
43 minutes ago
திண்டுக்கல்:''தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமற்றது'' என, மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமற்றது. அதில், முஸ்லிம்கள் நிர்வகிக்கும் ஓரியண்டல் பள்ளிகளில் உள்ள, உருது மொழி படிக்க வாய்ப்பு இல்லாமல் செய்தது.இதை, தமிழக அரசு ஓராண்டு நிறுத்தி வைக்கும் முடிவு, வரவேற்கத்தக்கதாகும். கேபிள் 'டிவி' தனியார் கையில் முடங்கியுள்ளது. தனியார் ஒருவருக்கு, தமிழக மக்கள் கப்பம் கட்டும் நிலையை மாற்றி, அரசு கேபிள் 'டிவி' யை கொண்டு வர, முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளது, பாராட்டுக்குரியது.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, கச்சத்தீவை மீட்பதற்கும், இலங்கையில் பொருளாதாரத் தடை விதிப்பதற்கும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார் . மாநில துணைச் செயலர்கள் சையது, சாதிக், மாவட்டத் தலைவர் பாருக்அப்துல்லா உட்பட, பலர் உனிருந்தனர்.
16 minutes ago
27 minutes ago
43 minutes ago