உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்காவில் சந்தனம் பூசும் வைபவத்திற்கு மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை

தர்காவில் சந்தனம் பூசும் வைபவத்திற்கு மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்: நாகை அருகே பிரசித்திப்பெற்ற தர்கா சந்தனம் பூசும் நிகழ்வுக்கு தேவையான சந்தனம் மற்றும் மங்கள பொருட்களை, மீனவர்கள் மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து சீர்வரிசையாக தர்கா நிர்வாகிகளிடம் வழங்கினர்.நாகை அடுத்த கல்லாரில் பிரசித்திப் பெற்ற மஹான் ஹழ்ரத்து மலாக்கா சாஹிப் என்ற ஹலிபத்து ஷெய்கு முறையதீன் ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 426 ஆண்டுகள் பழமையான இத் தர்காவில் ஆண்டு தோறும் கந்துாரி விழா விமர்சையாக கொண்டாடப்படும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல மதத்தை சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்பதால், நாகை மாவட்ட கடலோர பகுதி, களை கட்டும்.இந்தாண்டு 426 ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் நேற்று அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடந்தது.சந்தனம் பூசும் வைபவத்திற்காக, அக்கரைப்பேட்டை கிராம மீனவர்கள், பாரம்பரிய ஐதீக முறைப்படி, முத்துமாரியம்மன் கோவிலில் 10 கிலோ எடையுடைய சந்தனம் அரைத்து தயார் செய்தனர். சந்தனக்குடம், பட்டுப் போர்வை மற்றும் மங்களப் பொருட்களை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.பின் வானவேடிக்கை, மேள தாளங்களுடன் சீர் வரிசையாக தர்காவிற்கு எடுத்து சென்றனர். சீர் வரிசையுடன் வந்த மீனவர்களை, ஆரத் தழுவி வரவேற்ற தர்கா நிர்வாகிகள், தர்கா சன்னதிக்குள் அழைத்துச் சென்று கவுரப்படுத்தினர். தொடர்ந்து சந்தனம் பூசம் வைபவம் நடந்தது.ஹிந்து கோவிலில் அர்ச்சனை செய்த சந்தன்ததைகொண்டு, தர்காவில் நடந்த சந்தனம் பூசும் வைபவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.அக்கரைப்பேட்டை மீனவர்கள் கூறுகையில், எங்கள் கிராம முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, கல்லார் முஸ்லிம்கள் சீர்வரிசை எடுத்து வந்து வெண்கல ஆலய மணி வழங்கினர். நாங்கள் முதல் முறையாக சந்தனம் பூசும் வைபவத்திற்கு தேவையான சந்தனம் வழங்கினோம். இது தொடரும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
ஏப் 15, 2025 15:57

இவர்களைப் போன்ற ஒற்றுமையை விரும்பும் மக்கள் அதிகமாக தமிழகத்தில் இருப்பதால் தான் பாஜக இங்கு வெற்றி பெற முடியவில்லை! அதன் காரணமாகவே ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை பாஜகவினர் எதிர்க்கின்றனர்!


ஆரூர் ரங்
ஏப் 15, 2025 10:44

சமாதி வழிபாடு இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. அல்லாஹ் ஒருவரே வழிபடத்தக்க ஒரே கடவுள் என்பதைத்தான் கூம்பு ஒலிபரப்பில் தொழுகை அழைப்பாக கூறுகிறார்கள். சமாதி, தர்ஹா, சாயபுபாபா வழிபாடுகள், மயிற்பீலி மாந்திரீகம் தேவையற்றவை. ஹிந்துக்களுக்கு குலதெய்வ வழிபாடுதான் பிரதானம்.


Sundar R
ஏப் 15, 2025 10:27

அக்கரைப்பேட்டையில் வசிக்கும் இதுபோன்ற நன்மக்களான ஹிந்துக்களாலும், இஸ்லாமியர்களாலும் தான் நம் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. இவர்களின் கடும் உழைப்பினால் தான் நம் தமிழக பொருளாதாரம் உயர்கிறது. அரசியல்வாதிகளால் அல்ல. தேசவிரோத, பிரிவினைவாத கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளான திமுக, தவெக, நாதக, விசிக, மதிமுக, மநீம போன்ற கட்சிகளால் தான் தமிழகம் சீரற்ற நிலைக்கும், சீரழிந்த நிலைக்கும் தள்ளப்பட்டுள்து. தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மக்கள் போல் ஒன்றாக இருந்து மேற்கூறிய தேசவிரோத, பிரிவினைவாத கிறிஸ்தவ மிஷனரி கட்சியினரை ஒழித்துக் கட்டிவிட்டு தமிழகம் முழுவதும் தமிழர்கள் நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.


Ray
ஏப் 15, 2025 12:41

மீன்பிடி தொழிலில் இரண்டு கூறுகள் ஒன்று படகுகள் வலைகள் இன்னபிற தளவாடங்கள். இவைகளை வைத்துக் கொண்டு மீனவர்கள் துணையின்றி ஏதும் செய்ய முடியாது. இந்த உடமையாளர்கள் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களே. இவர்கள் மீனவர்களை நம்பித்தான் தங்கள் சொத்தைக் கொடுத்து கடலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதேபோல தளவாடங்களின்றி கையை காலை தொழில் திறமையை வைத்துக் கொண்டு மீனவ சமுதாயம் பிழைப்பதேது? ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த செய்தியில் கிறிஸ்தவ மிஷனரி எங்கிருந்து வந்தது? மீனவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறார்களே. காரணமில்லாமல் காரியமில்லை. இன்று அரசியல் கட்சிகள் மக்கள் ஓட்டைப் பெற தலையாலே தண்ணீர் குடிக்கிறார்கள் அதேபோலத்தான் மெஷினரிகளும் காலங்காலமாக வெள்ளைக்காரன் காலத்திருந்தே பல்வேறு = நல திட்டங்களை = செய்து ஏழை எளியோரின் வாழ்வை முன்னேற்றியுள்ளார்கள். நாம்தான் தீண்டுவதில்லையென்றோம். கோயிலுக்கு வராதே என்றோம். அவர்கள் அடுத்த இடத்தை பார்த்துக் கொண்டார்கள். இப்போது இப்படி புலம்புவதால் பயன் ஏதுமில்லை அல்லவா? இன்று முதல் வெறுப்பை வெறுப்போம்.


அப்பாவி
ஏப் 15, 2025 09:43

இதர தெய்வங்களை ஒத்துக்கிட்டா அவிங்களோட குரானின் முதல் வரிக்கே அர்த்தமில்லாம போயிடும். இந்துமதத்தில் சாய்பா மாதிரி அவிங்க ஆளையும் தெய்வமாக வழிபடறோம். இதுதான் வித்தியாசம். எல்லோரையும் இணைப்பது பொருளாதாரத் தேவை மட்டுமே.


Ramesh
ஏப் 15, 2025 08:34

உயிருக்கு பயந்து தனது அடையாளத்தை மாற்றி கொண்டவர்களின் நாட்டு பற்றையோ கலாச்சார உணர்வையோ எதிர்பார்க்க முடியாது.


Haja Kuthubdeen
ஏப் 15, 2025 09:37

நாட்டு பற்றிர்கும் மதத்திற்கும் சம்பந்த சம்பந்தமே இல்லை...


Haja Kuthubdeen
ஏப் 15, 2025 09:41

இந்தியன் என்று சொல்லிகொண்டு தேசிய கொடியை சட்டை பாக்கெட்டில் குத்தி கொண்டு ஊழல்செய்து நாட்டு பொருளாதாரத்தை ஊழல் செய்து நாசமாக்கும் ஆளும் மத தீவிரவாதியை விட ரொம்ப கேடுகட்டவன்தான்.


VENKATASUBRAMANIAN
ஏப் 15, 2025 08:09

இதுதான் உண்மாயான நிலை. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக உள்ளனர். ஆனால் இது அரசியல் கட்சிகளுக்கு பொறுக்காது. ஓட்டு அரசியலுக்காக சிலரை தூண்டி விட்டு பிரிவினை ஏற்படுத்துகிறார்கள்.


RAJ
ஏப் 15, 2025 07:55

விநாயகர் சதுர்த்திக்கு அவ்விங்க அன்பா வெடி வைப்பாங்க மீனவ நண்பர்கள்களே .. ..மதநல்லிணக்கம்.... ஹஹஹஹஹஹ்ஸ் .. போங்கடா டேய்.. ..


அப்பாவி
ஏப் 15, 2025 07:25

ஒண்ணா சேர்ந்து கெடா வெடிக்கலாம். ஆத்தா கோவிச்சுக்க மாட்டா.


Sampath Kumar
ஏப் 15, 2025 07:06

மத நல்ல இணக்கத்தை வெளிபடுத்தும் செய்தி போட்ட உங்களுக்கு நன்றி உங்க கும்பலின் உள்ள சில தற்குறிகளும் படிப்பார்கள் படித்து பார்த்து புரிந்து கொண்டால் sarii


vivek
ஏப் 15, 2025 08:42

உண்மை....ஒற்றுமையாக இருந்தால் திருட்டு திராவிடன் கலகம். செய்ய அங்கு நுழைய வாய்ப்பில்லை....


Varadarajan Nagarajan
ஏப் 15, 2025 06:43

இதுதான் உண்மையான மத நல்லிணக்கம். மத நம்பிக்கை, மதப்பற்று என்பது வரவேற்கத்தக்கதுதான். அது தவறில்லை. மதவெறிதான் மற்ற மதங்களையும் மற்றவர்களையும் மதிக்காது. அரசியல்வியாதிகள்தான் மதத்தைவைத்து அரசியல்செய்துகொண்டும் சிறுபான்மையினர் நலனையென வாக்குவங்கினடத்துவதும் ஒருசில மத பண்டிகைகள் கொண்டாடும்போது வாழ்த்துசொல்லுவதும் மற்ற மதத்தை சிறுமைப்படுத்துவதுமாக உள்ளனர் வாக்காளர்களுக்குத்தான் புரியவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை