உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்க தேசத்தினர் பதுங்கலா? சென்னையில் என்.ஐ.ஏ., சோதனை

வங்க தேசத்தினர் பதுங்கலா? சென்னையில் என்.ஐ.ஏ., சோதனை

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில், 29 பேர் கைதாகி உள்ள நிலையில், சென்னை புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்க தேசத்தினர் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கதேசத்தில் செயல்படும், 'அன்சல்லாஹ்' என்ற அமைப்பு, அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவிலும் கிளைகளை பரப்பி வருகிறது. அதேபோல, வங்கதேசத்தின் ஜமா உத் - உல் - முஜாஹிதீன் என்ற அமைப்பும், மேற்கு வங்கத்தில் ரகசியமாக செயல்படும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு பக்கபலமாக உள்ளது.

23 - 28 வயது

இந்த அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊடுருவி வருகின்றனர். அவர்கள் குறித்து, தமிழக போலீசாரும், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், அருள்புரம், முருகம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த, 23 - 28 வயதுடைய வங்க தேசத்தினர், 29 பேர், பல்லடம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கூட்டாளிகள், சென்னை அருகே உள்ள படப்பை, மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், தனியார் நிறுவன ஊழியர்கள் போல பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

போலி சான்றிதழ்

அந்த இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், 'வங்க தேசத்தினர், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் போல போலி சான்றிதழ் கொடுத்து, தனியார் நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். தற்போது, பொங்கல் விடுமுறைக்கு மற்ற ஊழியர்கள் சென்று விட்டதால், தொழிற்சாலைகளின் தங்கும் இடங்களில், வடமாநிலத்தவர்கள் மட்டுமே அதிகம் உள்ளனர். அவர்களில் வங்க தேசத்தினர் உள்ளனரா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venkataraman
ஜன 14, 2025 14:09

தமிழ்நாடு எப்போதுமே தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. மத்திய அரசின் NIA, CBI போன்ற புலனாய்வுத் துறையினர் மட்டும்தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். தமிழக காவல்துறை இதை பற்றி கண்டுகொள்வதில்லை. LTTE யினர் ராஜீவ் காந்தியை கொன்றதால்தான் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதுபோல, தமிழ்நாட்டில் அத்வானி போகிற இடத்தில் வெடிகுண்டு வைத்தார்கள். கோயம்புத்தூரிலும் வெடிகுண்டு வைத்து ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள். இப்போது கூட ஐ எஸ் என்கிற வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டார்கள். இன்னும் பல தீவிரவாத இயக்கங்கள் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக காவல்துறை இந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.


Puratchi Thondan
ஜன 14, 2025 09:59

பாஸ்ப்போர்ட்டில் உள்ள பார்க்கோடு தொழில்நுட்பத்துடன் அடையாள அட்டைகள் வழங்காதவரையில் இது போன்ற கள்ள வந்தேறிகளை கண்டறிதல் மிகவும் கடினம்.


Dharmavaan
ஜன 14, 2025 07:11

அரசு இது போல் தேசவிரோதிகளுக்கு அடைக்கலமாக திகழ்கிறது .மத்திய அரசு ஏன் நாட்டின் எல்லா தொழிலாளர்களின் விவரத்தை தொழில்துறை, வெளியுறவு அமைச்சகத்துக்கு தெரிவிக்க சட்டம் கொண்டுவரவில்லை. எப்படி இவர்கள் இந்நாட்டில் உள்ளே வருகிறார்கள் எல்லையில் அவ்வளவு ஓட்டை உள்ளதா , லஞ்சமா ?


Kasimani Baskaran
ஜன 14, 2025 07:10

சமூக தீவிரவாதிகளுடன் சேர்ந்து உண்மையான தீவிரவாதிகள் தமிழகத்தை ஆக்கிரமிக்கும் வகையில் ஒரு ஆட்சி... மகா வெட்கக்கேடானது.


நிக்கோல்தாம்சன்
ஜன 14, 2025 06:38

எங்கும் தமிழ் என்று பிதற்றும் திராவிட கட்சிகள் தமிழகத்தில் தமிழே இல்லாமல் வாழமுடியும் என்று ஒரு சமூகத்தினர் செய்து வருகின்றனர் அதனை உணராத கழகத்தினர் இருந்தென்ன பயன் ?


சமீபத்திய செய்தி