உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி

யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி

சென்னை:டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வில் யாரோ செய்த தவறுக்காக, தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியாக்குவதில் நியாயமில்லை என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lz73m58h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த ஜூலை12 அன்று நடைபெற்ற தேர்வில், தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத, கேள்விகளே புரியாத வண்ணம், மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன என, தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர். https://x.com/annamalai_k/status/1947956980837937307எதிர்மறை மதிப்பெண் இல்லை என்பதால், அனைத்துத் தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேர்வுக்குக் கடினமாக உழைத்துத் தயாரானவர்களும், இறுதியில் அதிர்ஷ்டம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு வேலைக்குத் தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்துப் பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டியதும் கூட.அரசு வேலை என்ற கனவுகளோடு தேர்வுக்குத் தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை. எனவே, தமிழக அரசு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4, தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் அல்லது, ஒட்டுமொத்தமாக அந்தக் கேள்விகளை நீக்கி, மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற பாடத்திடத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Gajageswari
ஜூலை 26, 2025 05:07

இப்படியே பாடப்புத்தகம் படித்து தேர்வு எழுதுவதற்கு பதில் பள்ளி மதிப்பெண் போதுமானது


papuraj
ஜூலை 24, 2025 11:52

மதிப்பிற்குரிய அண்ணன் அண்ணாமலை அவர்களே மறு தேர்வு என்பதை காட்டிலும் காலிபாணியிடங்களை அதிகரித்து கட் ஆப் மதிப்பெண்ணை வெளியிட வேண்டும்.... மறு தேர்விலும் இதுபோல தான் அய்யன் புகழை துதி பாடி கேள்வி கேட்பார்கள்.... அது மேலும் மனவுளைச்சலுக்கு நேரிடும்.. s


பாமரன்
ஜூலை 24, 2025 08:31

ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ஒன்னுமில்லை முக்கி முக்கி மார்கெட்டிங் பண்றோம்...ஒன்னியும் வர மாட்டேங்குது


Rajamanickam K
ஜூலை 23, 2025 23:39

என்னதான் புத்தகத்தை படித்தாலும் நாட்கள் கலிந்தாலும் வேலை கிடக்க வில்லை அரசு வேலை நோ நம்பிகை கோட்s கிரேட்


Rajamanickam K
ஜூலை 23, 2025 23:28

என்னதான் books


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 23, 2025 21:18

உம்மோட வாயாலே ஆடீம்கா கூட்டணி பலியானது ரொம்ப வருத்தமா இருக்கு


திகழ்ஓவியன்
ஜூலை 23, 2025 21:12

யாரோ செய்த தவறுக்கு குஜராத் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 139 பேர் இறநதார்களே அதை கேட்டேர்களா , TNPSC இல் ஒன்றிய அரசு சொல்லி , பன்னேர்செலவம் ஒரு AMENDMENT வெளி மாநிலத்தவர் கூட கலந்து கொள்ளலாம் என்று ஒரு அபத்தமான ஆர்டர் , இதனால் தமிழக மாணவர்கள் எவ்வ்ளவு பேர் வேலை வாய்ப்பு இழந்தார் இதை பேசுங்க OFFICER


Neelachandran
ஜூலை 23, 2025 20:35

Whistleblower Annamalai who pointed out right thing at right time


G Mahalingam
ஜூலை 23, 2025 20:14

என்னதான் படித்தாலும் வெற்றி பெற்றாலும் நேர்முக தேர்வு இருந்தாலும் கொடுக்க வேண்டியதை கொடுத்தால்தான் திராவிட மாடல் ஆட்சியில் வேலை. அரசு அதிகாரிகளுக்கு தலைவர் மாவட்ட செயலாளர்.


கண்ணன்
ஜூலை 23, 2025 19:24

கேள்வி புரிவில்லை என்றால் அது ‘நம்மவர்’ கேள்வியாக இருக்குமோ?!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை