உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: தொகுதிகள் எண்ணிக்கையில கை வச்சிடுவாங்கன்னு பயப்படுறாரோ?

டவுட் தனபாலு: தொகுதிகள் எண்ணிக்கையில கை வச்சிடுவாங்கன்னு பயப்படுறாரோ?

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்:

தி.மு.க.,விடம் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு தனி தொகுதிகளை குறிப்பிட்டு, அதில் மூன்று கேட்டுள்ளோம். பொது தொகுதிகளில் ஒன்று வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அடுத்தகட்ட பேச்சில், தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் பின்னர் முடிவெடுக்கப்படும்.

டவுட் தனபாலு:

'தனி சின்னத்துல தான் வி.சி., போட்டியிடும்' என அடித்து சொல்லாம மழுப்புறாரே... அப்படி கறாரா பேசினா, தொகுதிகள் எண்ணிக்கையில, 'கை' வச்சிடுவாங்கன்னு பயப்படுறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!---

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொகிதீன்:

ஏற்கனவே, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். அதனால், அதே தொகுதியை ஒதுக்குமாறு தி.மு.க.,விடம் கேட்டுள்ளோம். கூடுதலாக, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் கேட்டுள்ளோம். முதல்வரிடம் பேசி பரிசீலிப்பதாக, தி.மு.க., குழு கூறியுள்ளது.

டவுட் தனபாலு:

எல்லா கட்சிகளும், போன தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் கேட்டு, பட்டியல் கொடுத்திருக்காங்க... கண்டிப்பா கிடைக்காது என தெரிந்தும், உங்க கட்சியின் கெத்தை விட்டுடக் கூடாதுன்னு தான், ராஜ்யசபா சீட் கேட்டிருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!---

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி:

லோக்சபா தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளை ஒரு சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது, அ.தி.மு.க.,வுக்கு எதிரான கருத்து திணிப்பாக உள்ளது. இதனால், அ.தி.மு.க.,வின் வெற்றியை யாரும் தடுத்துவிட முடியும் என, கனவு காண வேண்டாம்.

டவுட் தனபாலு:

எந்த கட்சியும் கூட்டணிக்கு வராத சூழல்லயும், லோக்சபா தேர்தல்ல ஜெயிப்போம் என்ற உங்களது அபார நம்பிக்கையை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்... நிஜமாகவே வெற்றி மீது நம்பிக்கை இருந்தால், கோவை லோக்சபா தொகுதியில நீங்களே வேட்பாளராக களமிறங்கலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ