உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.இ., படிக்க போறீங்களா? மே 7ல் விண்ணப்ப பதிவு துவக்கம்!

பி.இ., படிக்க போறீங்களா? மே 7ல் விண்ணப்ப பதிவு துவக்கம்!

சென்னை: பி.இ., படிப்புகளுக்கு மே 7ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மே, 9ம் தேதி வெளியாக உள்ளது. இப்போது இருந்து மேற்படிப்புகள் தொடர்பாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த சூழலில், பி.இ., படிப்புகளுக்கு மே 7ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அன்று காலை 10 மணிக்கு விண்ணப்ப பதிவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் துவங்கி வைக்கிறார். ஜூன் 6ம் தேதி வரை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணையதளம் https://www.tneaonline.org/ வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பி.இ., படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த இணையதளத்தில் சென்று மே 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ், 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உள்ள இளநிலை பொறியியல் படிப்புக்களுக்கு ஒன்றரை லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணைய வழியில் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
மே 05, 2025 14:56

90 சதவீதத்துக்கு குறைவாக மார்க் எடுத்தவர்களுக்கு டிப்ளமா அல்லது ITIயில் மட்டுமே சீட் என அறிவிக்கவும். லட்சக்கணக்கில் செலவழித்து நான்கு ஆண்டுகள் கழித்து டெலிவரி வேலைக்கு செல்வதை விட இரண்டே ஆண்டுகளில் நேரடியான தொழில் கற்கட்டும். செலவும் குறைவு. நேரமும் மிச்சம். சுய தொழிலே செய்ய முடியும்


sundarsvpr
மே 05, 2025 14:06

மாணவர்கள் மேல்படிப்பது அவசியம்தான். படித்த பிறகு பெற்ற அறிவைவைத்து தொழில் நடத்தும் வாய்ப்புள்ளதா என்பதனை கருதிக்கொண்டு படிப்பினை தேர்வு செய்யவேண்டும். இதற்கு புள்ளிவிபரங்களை கவனித்தால் பி.ஈ படித்தவர் பணி இழந்து இருக்கிறார்கள் என்பதனை கவனத்தில் இருக்கவேண்டும். இந்த புள்ளி விபரங்களை பொறியியல் கல்லூரி தகவல் பலகையில் கொடுப்பதுதான் உண்மையான விளம்பரம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 05, 2025 13:59

பிஇ படிச்சு என்ன பண்றது? தண்ணீர் கேன் டெலிவரி பாயாகவோ, ஜோமொடோ டெலிவரி பாயாகவோ அல்லது டாக்ஸி டிரைவராகவோ வேலை செய்யலாம். 80 சதவிகித பிஇ பட்டதாரிகளுக்கு இதுதான் நிலைமை.


Yes your honor
மே 05, 2025 15:01

அப்துல் கலாம், அண்ணாமலை, இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் பி.இ. பட்டதாரிகள் தான். இதே இன்ஜினியரிங் படித்துவிட்டுத்தான் பலபேர் வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். எப்படிப் படிக்கிறோம், எப்படி இன்ஜினியரிங் என்பதை புரிந்து கொள்கிறோம் என்பதை பொறுத்து தான் வாழ்வில் டீக்கடை வைக்கிறாரா அல்லது 100கோடி யுனிகான் கம்பெனி ஓனராகிறாரா என்பது அமையும். படிப்பை மட்டுமே குறைசொல்லுவது நியாயமில்லை.


சமீபத்திய செய்தி