உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரணைக்கு நீங்க தயாரா; முதல்வருக்கு அன்புமணி கேள்வி

சி.பி.ஐ., விசாரணைக்கு நீங்க தயாரா; முதல்வருக்கு அன்புமணி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதானி ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார்; மின்வாரிய ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு மாநில அரசு தயாரா என முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.சட்டசபையில் பேசும் போது, 'அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பார்லி., கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். தி.மு.க., மீது குறை சொல்லி கொண்டு இருக்கும் பா.ஜ.,வோ, பா.ம.க.,வோ, பார்லிமென்டில் இந்த கோரிக்கை ஆதரிக்க தயாராக இருக்கிறதா?' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0nc9zz0l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நாங்க தயார்!

அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பார்லி., கூட்டுக்குழு விசாரணையோ, அல்லது வேறு எந்த விசாரணையோ அனைத்தையும் ஆதரிக்க பா.ம.க., தயாராக இருக்கிறது. இதில் பா.ம.க.,வுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏற்கெனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக என்னிடம் கேட்டபோது, அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறேன்.

நேரடி ஒப்பந்தம்

முதல்வர் ஸ்டாலினுக்கு இது குறித்து எதுவும் தெரியாது போல் இருக்கிறது. அதனால் தான் சட்டசபையில் இப்படியொரு கேள்வி எழுப்பி இருக்கிறார். அதானி குழுமத்திற்கும் தமிழக மின்சார வாரியத்திற்கும் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளப் பட்டிருப்பதாக பா.ம.க. ஒரு போதும் கூறவில்லை. அதானி குழுமம் தயாரித்த மின்சாரத்தை இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்காக தமிழக மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டுக் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறதே, அது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

பதில் கூற மறுப்பது ஏன்?

மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் தேவையில்லை. அதானி குழுமத்திடம் இருந்து, இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்தின் வாயிலாக மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக தமிழக மின்சார வாரியம் கையூட்டு பெறவில்லை என்றால், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடலாம். அவ்வாறு செய்யாமல், இந்த சிக்கல் குறித்து பேசுவதற்கே தமிழக அரசும் முதல்வர் ஸ்டாலினும் அஞ்சுவதும், பதில் கூற மறுப்பதும் ஏன்?

நீங்க ரெடியா?

அதானி குழுமத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படுவதை பா.ம.க., முழுமையாக ஆதரிக்கிறது. அதேபோல், தமிழக மின்வார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கோ, அல்லது உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கோ ஆணையிடுவதற்கு தயாரா? என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 10, 2024 21:13

FIRST உங்க தகுதி என்ன சொல்லுங்க தேர்தலில் தோற்று எடப்பாடி மூலம் MP ஆனா நீங்க பேச லாயக்கில்லை


Ramesh Sargam
டிச 10, 2024 19:52

அதானி என்னுடைய குடும்ப நண்பர். அந்த முறையில் அவரை தனிமனிதனாக சந்தித்தேன். முதல்வராக அவரை நான் சந்திக்கவில்லை. இப்படியும் முதல்வர் கூற வாய்ப்பிருக்கிறது.


Rajkumar
டிச 10, 2024 19:51

சார் நீங்க போயிட்டு உங்க வீட்ல யாராவது பெரிய மனுசங்க இருந்தால் அனுப்பி விடுங்க


Manivannan
டிச 10, 2024 19:02

பங்கு கிடைக்கவில்லை என பாமக கொஞ்சம் பதறத்தான் செய்யும். பேரம் படிந்தவுடன் இது அடங்கி போகும். இதில் உண்மை வெளிப்படும் என காத்திருக்கும் மக்கள் எப்போதுமே மாக்கள்தான்.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 10, 2024 18:52

உங்க மோடி கூட்டணியில் எடுபுடி ஆட்சி அப்ப தான் ஊழல் என்று ஆகி 150000 கோடி கடன் இதை கேட்க துப்பற்றவன் , சரி நீ தான் கட்சி மாறி மாறி பெட்டி வாங்கி சேர்த்த பணத்தை கொஞ்சம் இந்த நிவாரணத்திற்கு கொடுக்கலாமே உங்க மரவெட்டி கூட்டம் வரைக்கும் செய்ய மனம் இருக்கா


Duruvesan
டிச 10, 2024 18:14

தப்புன்னா மோடி அரசாங்கம் மூடிக்கிட்டு இருப்பது எதனால்?


வைகுண்டேஸ்வரன்
டிச 10, 2024 17:39

சி பி ஐ, இ டி, சி ஏ ஜி எல்லாம் என்ன, எதுக்கு இருக்கு என்று ஸ்கூல் பசங்களுக்குக் கூடத் தெரியும்.


வைகுண்டேஸ்வரன்
டிச 10, 2024 17:38

ஆளாளுக்கு சி பி ஐ என்கிறார்கள். அது என்ன ஆகாயத்திலிருந்து நேரா குதிச்சவங்களா? சி பி ஐ யின் தீர்க்கப்படாத வழக்குகள் 8000, 10,000 இருக்கும் அதுவும் 10, 20 வருடங்கள் ஆகியும் தீர்க்கப்படாமல் உள்ளன. இணையத்தில் போய் பாருங்க.


ghee
டிச 11, 2024 07:56

8000, 10000? நீ அடிசிவிடு புருடா வைகுண்டம்....ஹ ஹ


Madras Madra
டிச 10, 2024 17:22

எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும் பதில் எல்லாம் சொல்ல மாட்டோம் - திமுக


sundaran manogaran
டிச 10, 2024 17:05

செந்தில் பாலாஜியை மின் துறைக்கு அமைச்சர் ஆக்கியதே இந்த மாதிரி வசூலுக்குத்தான்.இதுபுரியாமல் அன்புமணி ஏதோ உளருகிறார்.இதையெல்லாம் தமிழக மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கத்தான்....இலவசங்கள்...... ஓட்டுக்கு காசு என்று அள்ளி வீசப்படுகிறது....


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 10, 2024 18:54

ரொம்ப பேசினால் தங்கமணி ஏன் மாத மாதம் பியூஸ் கோயல் ஐ சந்தித்தார் என்று விலாவாரியா வரும் கப்பம் தான்


சமீபத்திய செய்தி