உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹெல்மெட் கட்டாயமில்லையா?: டி.ஜி.பி., கடும் எச்சரிக்கை

ஹெல்மெட் கட்டாயமில்லையா?: டி.ஜி.பி., கடும் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lqlt67s4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில், ஆண்டுக்கு, 40 சதவீதம் பேர், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதனால், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இது, 2015ல் இருந்து கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் விதிமீறலுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். எனினும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.கே.ராஜேந்திரன் என்பவர், 'ஹெல்மெட் கட்டாயம் என்பதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை' என்று, பொது நல வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த நீதிமன்றம், 'அரசு வெறும் உத்தரவு போட்டால் மட்டும் போதாது' என, அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் இருந்து அரசு விலக்கு அளித்து இருப்பதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

P.SARAVANAN
டிச 17, 2024 11:50

தலைக்கவசம் அணிவது பாதுகாப்பானது அதை மறுக்கவில்லை அதேசமயம் காவல் துறை நடவடிக்கை பொதுவாக உயிர் பாதுகாப்பு என்று கூறினாலும் சில இடங்களில் நடைமுறையில் அவ்வாறு இல்லை என்று தெரியவருகிறது பணம் வசூல் செய்வதற்காக தான் இந்த செயல் என்று அவர்களின் நடவடிக்கை உள்ளது, ஏனெனில் ஒரு புதிய இருசக்கர வாகனம் அதனை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து அதன் பதிவு சான்றிதழ் கைக்கு கிடைக்கப்பெறவில்லை, வாகனத்திற்கு காப்பீடு உள்ளது ஓட்டுனர் உரிமம் உள்ளது இருப்பினும் காவலர்கள் வாகனத்தனிக்கையில் எவ்வித விபரமும் கேட்க்காமல் பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீடு நகல் காண்பிக்கவில்லை ஓட்டுனர் உரிமம் காண்பிக்கவில்லை தலைக்கவசம் அணியவில்லை என்று அபதாரம் விதித்துள்ளது இதை வைத்து பார்க்கும் போது பணம் ஒன்றே பிரதானமாக எண்ணி செயல்படுவதாகவே கருதப்படுகிறது...


balakrishnankalpana
டிச 17, 2024 10:26

தமிழ்நாட்டில் எத்தனையோ குற்றங்கள் கண்டுபிடிக்கவில்லை கொலை, கொள்ளை, ஓழல் etc ஆனால் காவல்துறை ஹெல்மெட் அணிவதை தீவிரமாக கண்காணித்து, கட்டாய காசு பார்க்கிறது


Paramasivam Ravindran
டிச 17, 2024 10:19

ஹெல்மெட் போடாவிட்டால் அபராதம் விதிக்காமல் பிடிக்கும் பொழது ஒவ்வொரு முறையும் ரூ.500 பெற்றுக்கொண்டு ஒரு ஹெல்மெட் கொடுத்தால், நிச்சயமாக அடுத்தமுறை ஹெல்மெட் வாங்காமல் இருக்க அனைவரும் ஹெல்மெட் அணிந்து வருவார்கள். நடைமுறை செய்தால் அரசாங்கத்திற்கு, விபத்தினால் ஏற்படும் மனிதர்களுக்கு செய்யும் மருத்துவ செலவு கணிசமாகக் குறையும்


arasiyal kelvi tv
டிச 17, 2024 00:09

உயிர் போகணும் னு இருந்தால் அதை தடுக்க யாராலும் முடியாது தலை கவசம் போட்டாலும் உடலில் சக்கரம் ஏறி உயிர் இழப்பு ஏற்படலாம் உயிரை காரணம் காட்டி அரசு பணம் சம்பாதிக்கிறது மதுவால் ஏற்படாத உயிர் இழப்பா தலை கவசம் அணியாததால் நடக்கிறது மக்கள் பணத்தை ரத்தம் குடிக்கும் ரத்த காட்டரியாக உறிந்து குடிக்க துடிக்கும் அரசு இதை மாற்ற வேண்டும் என் உயிர் மேல் எனக்கு இல்லாத அக்கறை அரசுக்கு ஏன் வருது


வல்லவன்
டிச 16, 2024 17:24

எல்மட் போட்டும் மணல் ஏற்றி கொல்கிறான்


Gajageswari
டிச 16, 2024 16:56

ஹெல்மெட் என்பது பாதுகாப்பு கவசம், விபத்து நடந்த பிறகு. எப்போ பாதுகாப்பான விபத்து இல்லாமல் சாலை போக்குவரத்து ஏற்படுத்துவீர்கள்


வல்லவன்
டிச 16, 2024 14:50

எல்மட் போடாதவன் மட்டும்தான் இளிச்சவாய சோனகிரி


NANDHAGOPAL R
டிச 16, 2024 14:15

டாஸ்மாக் எப்போ சார் மூடுவீங்க?


Murugesan
டிச 16, 2024 13:31

தமிழக காவல்துறையை சீரழித்து திமுக அடிமையாக இருக்கிற ஜடம்


Barakat Ali
டிச 16, 2024 13:23

மகளுக்காக ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை