உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓ.என்.ஜி.சி., திட்டத்தால் அரியலூர் மாவட்டமே பாலைவனமாகும்

ஓ.என்.ஜி.சி., திட்டத்தால் அரியலூர் மாவட்டமே பாலைவனமாகும்

பா.ம.க., ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாலு அறிக்கை:

அரியலுார் மாவட்டத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க முடிவு செய்து, அதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து உள்ளது. அந்த மாவட்டத்தில், 70 சதவீதம் மக்கள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இந்த திட்டத்தால் மாவட்டமே பாலைவனமாகும்.

முதல்வர் ஸ்டாலினை, உங்க டாக்டர் சந்திச்சி பேசினப்போ இதை பற்றி எல்லாம் சொல்லி இருக்க மாட்டாரா என்ன?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் பேட்டி:

தமிழகத்தில், 388 ஒன்றியங்கள், 12,525 ஊராட்சிகள் உள்ளன. தற்போது, நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இதனால், ஊராட்சிகளின் எண்ணிக்கை குறையும். எனவே, தமிழகத்தில், பெரு ஊராட்சிகளை பிரிக்கவும், புதிய ஒன்றியங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுக்கு பதிலா இணைக்கிற ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களை, அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு மாற்ற கோரிக்கை வைக்கலாமே!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் பேட்டி:

தமிழகத்தில், சாலை வரி உயர்வால், லாரி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், உயர்த்தப் பட்ட காலாண்டு வரியை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல, தி.மு.க., அரசின் குறைகளை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம்.

கூட்டணி, 'சீட்' ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்காக, தேர்தல் நேரத்துல மட்டும் சிலர் ஆளுங்கட்சிக்கு எதிரா வாய் திறப்பாங்க... நாங்க அவங்க இல்லை என்கிறீர்களா?

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் கந்தவேல் முதல்வருக்கு அனுப்பிய மனு:

பொங்கல் பரிசு தொகுப்பு, 1,000 ரூபாயை ரொக்கமாக வழங்குவதற்கு பதிலாக, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணி எடுக்க வசதியாகவும், சிந்தாமணி போன்ற அரசின் கூட்டுறவு பண்டக சாலைகளில் மளிகை உள்ளிட்ட தேவையான பொருட்களை கொள்முதல் செய்யவும், 'டோக்கன்' வழங்கலாம். இதன் மூலம், கோ - ஆப்டெக்ஸ், சிந்தாமணி போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். இதுபற்றி முதல்வர் பரிசீலித்து, திட்டத்தை மாற்றி அறிவிக்க வேண்டும்.

நீங்க வேற... பொங்கல் பரிசு தொகுப்பு, 1,000 ரூபாயில் பாதிக்கும் மேல, 'டாஸ்மாக்' வியாபாரம் மூலமா அரசுக்கே திரும்ப வந்துடும் பாருங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sridhar
ஜன 08, 2024 13:08

ONGC கிணறுகள் அமைத்தால் விவசாயம் எப்படி பாதிக்கப்படும்? நிலம் எப்படி பாலைவனமாகும்? இவுனுகளுக்கெல்லாம் உண்மையாலுமே அறிவுன்னு ஒன்னு இருக்கா? இப்படித்தான் இன்னொரு பய, செய்தியாளர்கள் சந்திப்புல அரைகுறை புத்திய வச்சுக்கிட்டு என்னவெல்லாமோ பேசுறான். அவுனுக்கு பின்னால ஒரு கூட்டம் அவன் சொல்றத அப்படியே பிரமிச்சு கேட்டுட்டு இருக்கு இவனுகளோட கற்பனையில மத்திய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டை பாலைவனமாக்க சதி செய்கிறதாம், பிற்காலத்தில் தனி நாடு கேட்கும்போது, இந்தா வைத்துக்கொள் என்று பாலைவனத்தை விட்டுவிட்டு சென்றுவிடுவார்களாம் இந்த ஒரு பிரிவினை மற்றும் வெறுப்பு பேச்சுக்கே அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து உள்ளே வைக்கலாம்.


lana
ஜன 08, 2024 09:41

தமிழகத்தில் உள்ள எல்லா cement ஆலைகள் அரியலூர் இல் உள்ளது. அப்போது பாலைவனம் ஆகாத மாவட்டம் இப்போ ஆகி விடும். இவர் வக்கீல் தானே பிற அண்டை மாநில ஆற்றில் மணல் அள்ள தடை உள்ளது போல் இங்கும் தடை விதிக்க போராட்டம் நடத்த வேண்டும்


Sampath Kumar
ஜன 08, 2024 09:05

தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்த நோண்டல் வேலை நடக்கிறது மற்ற மாநிலத்தில் கிடையாது ஒட்டு மொத்தமாக சொல்லியே முடிக்கத்தான் இந்த ஒன்றியம் நினைக்கின்றது தமிழ் நட்டு மக்கள் இன்னும் புரியாமல் உள்ளனர்


Raa
ஜன 08, 2024 10:48

வந்துட்டாரப்ப அறிவாலய ஆசான். இவருதான் எல்லா மாநிலங்களுக்கும் போய் பார்த்துட்டு வந்தாரு. டெல்டாவில் ONGC குழாய் போட உத்தரவிட்டவரின் கையெழுத்து யாருடையது என்று சம்பத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.


Svs Yaadum oore
ஜன 08, 2024 07:20

ஓ.என்.ஜி.சி., திட்டத்தால் மாவட்டமே பாலைவனமாகும்....ஆனால் வரலாறு காணாத ஆற்று மணல் கொள்ளையால் விவசாயம் செழிக்கும் ....மானங்கெட்டவனுங்க ....


Ramesh Sargam
ஜன 08, 2024 09:01

Super bro.


Sathyam
ஜன 08, 2024 10:08

அது தான் இந்த கேடு கேட்ட போலி போராளீஸ் பா மா கா ஒரு மகா கேடு கேட்ட பரகேவலமான ஒரு குடும்ப கட்சி எல்லாம் தலை எழுத்து சாபட்கேடு இந்த த்ரவிஷா பா மா கா மாதிரி ஒரு தீய கட்சி


Raa
ஜன 08, 2024 10:49

திருடர்கள்....


Ramesh Sargam
ஜன 08, 2024 07:03

பாலு அவர்கள் வக்கீலுக்கு படித்தாரா, அல்லது சுற்றுச்சூழல் பற்றி படித்தாரா?


NicoleThomson
ஜன 08, 2024 05:42

வக்கீல் பாலு எல்லாம் எனக்கு தெரியும் என்ற நோய் உள்ளவர் போல?


Kasimani Baskaran
ஜன 08, 2024 05:15

நாடகக்கோஷ்டி ஆட்சியில் இருக்கும் வரை விவசாயிகளை வாழவிட மாட்டார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை