உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிபிஐ விசாரணைக்கு மாற்றம்; ஐகோர்ட் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிபிஐ விசாரணைக்கு மாற்றம்; ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை பெரம்பூரில், கடந்தாண்டு ஜூலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன், வழக்கறிஞர் ஹிரிஹரன் உள்ளிட்ட 27 பேரை, போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=edzl7zdf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம்சாட்ட நபர்களிடம் நகலும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை செம்பியம் போலீசார் நியாயமாக விசாரிக்கவில்லை; சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற விபரங்களில் பல முரண்பாடுகள் உள்ளன என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இந்த வழக்கில் 6 மாதங்களில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அரசியல், ஊடகம் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசாரிடம் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

visu
செப் 24, 2025 18:39

எல்லா தடையதையும் அழித்துவிட்டு சிபிஐ கிட்ட கொடுத்தால் அவங்க என்ன செய்யமுடியும் சிபிஐ தாமதம் என்றால் நீதிமன்றம் கண்டிக்கும் சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் 6 வருடமா வழக்கு நடக்குது நீதிமன்றத்தை யார் கண்டிப்பது


Sivaram
செப் 24, 2025 18:02

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு காங்கிரஸ் பிரமுகர் அவர் வீட்டின் தோட்டத்தில் கொல்லப்பட்டு கிடந்தாரே அந்த கேஸ் என்ன ஆயிற்று. என்ன நடக்கின்றது தமிழ் நாட்டிலே கேட்பவர் எவரும் இல்லையா


அப்பாவி
செப் 24, 2025 17:40

சி.பி.ஐ தொப்பைகள் விசாரிச்சா மட்டும் உண்மை வந்துருமா? இத்தன நாள் கேசை நீர்க்க வெச்சதே ஊத்தி மூடத்தான்.


duruvasar
செப் 24, 2025 16:43

யார் அந்த சார் , மர்ம முடிச்சு நீள்கிறது.


Nandakumar Naidu.
செப் 24, 2025 16:29

எல்லா சாட்சியங்களையும் அழித்து விட்ட பிறகு என்ன பயன்?


rama adhavan
செப் 24, 2025 17:57

அதற்கு தான் கிடுக்கிபிடி விசாரணை உள்ளதே? அதை நமது போலீசுக்குக்கும் போட வேண்டும்.


Chandru
செப் 24, 2025 16:24

What happened to Shri Ajith Kumar s case? CBI, could not even present the case in an appropriate manner. Has it now come under the control Of dmk??


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 24, 2025 17:48

பாஸ் அவங்க எல்லாத்தையும் அழித்து விடுவார்கள் ,சிபிஐ ஒன்னும் கிழிக்க முடியாது


SUBBU,MADURAI
செப் 24, 2025 15:16

இந்த தீர்ப்பை கேட்டதும் செல்வப்பெருந்தொகை இந்நேரம் வேஷ்டியில் உச்சா போயிருப்பார் அநேகமாக இன்னும் சில நாட்களில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரான செல்வப்பெருந்தொகையை அவரின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை


G Mahalingam
செப் 24, 2025 15:12

திமுக உச்ச நீதிமன்றம் செல்லும். அப்படி சென்றால் திமுகவுக்கு சம்பந்தம் இருக்கு.


duruvasar
செப் 24, 2025 14:35

உண்மை வெளிவந்தால் நன்றாக இருக்கும்.


N Annamalai
செப் 24, 2025 14:26

காலம் தாழ்ந்த உத்தரவு .மிகவும் அலட்சியமாக கையாளப்பட்ட வழக்கு .மெதுவாக ஏன் நடத்துகிறார்கள் என்று புரியவில்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை