உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் கட்சி பதவி பறிப்பு; பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் கட்சி பதவி பறிப்பு; பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி விடுவிக்கப்பட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், 52. சென்னை பெரம்பூரில், கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6kbxf39v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை, பொற்கொடி 500க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒன்று திரண்டு நேரில் சந்தித்து பேசினார்.அப்போது, மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆவேசமாக புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது, ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி விடுவிக்கப்பட்டார். தமிழக மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் எனறு கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஏப் 16, 2025 08:03

வாரிசுகள் இருக்காங்களா?


Manalan
ஏப் 15, 2025 11:09

waiting.


V K
ஏப் 15, 2025 10:37

உத்திரபிரதேஷிலே கட்சி காலி ஆனால் தமிழ்நாட்டிலே ஐநூறு பேர் இருகிறார்கள் என்றால் அது மிக பெரிய வெற்றி


Barakat Ali
ஏப் 15, 2025 10:37

பொற்கொடி இனி திருமாவின் கரங்களை வலுப்படுத்தவேண்டும் .....


Sridhar
ஏப் 15, 2025 13:26

நீங்க வேற எதோ சொல்லறமாதிரி தெரியுதே?


Barakat Ali
ஏப் 15, 2025 14:00

என்னங்க தப்பு ????


Barakat Ali
ஏப் 15, 2025 10:26

கொலைவழக்கு என்னாச்சு? ராமஜெயம் கொலைவழக்கு மாதிரிதான் முடிவு ஆயிருமோ ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை