பிரதமருடன் தமிழக இளைஞர்கள் 40 பேர் கலந்துரையாட ஏற்பாடு
சென்னை: ஜன., 12ம் தேதி தமிழக இளைஞர்கள் 40 பேர் பிரதமர் மோடியுடன் உரையாட இருப்பதாக மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் தமிழகம், புதுச்சேரி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'டில்லியில் ஜன.,11, ஜன.,12ல் 28வது தேசிய இளைஞர் திருவிழா நடைபெறும். அதன் ஒரு பகுதியாக ஜன.12ல் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விழாவில் தமிழக இளைஞர்கள் 40 பேர் பிரதமர் மோடியுடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக இரண்டு கட்டங்களாக இளைஞர்கள் தேர்வு ஏற்கனவே நடந்தது. இறுதிக்கட்ட தேர்வு டிச.,27, டிச.,28ல் சென்னையில் நடக்கிறது. இதில் 250 பேர் பங்கேற்பர். இவர்களில் 40 பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் தான் பிரதமரை சந்திப்பர்,' எனக் கூறினார்.