உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொட்டதற்கெல்லாம் கைது செய்வதா: தமிழக அரசு மீது மா.கம்யூ., விமர்சனம்!

தொட்டதற்கெல்லாம் கைது செய்வதா: தமிழக அரசு மீது மா.கம்யூ., விமர்சனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தொட்டதற்கு எல்லாம் முன்னெச்சரிக்கை கைது என போலீசார் நடந்து கொள்வது சரியல்ல'', என தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனநாயக அமைப்பில் பிரசாரங்கள், போராட்டங்கள் எல்லாம் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகள். ஆனால் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தெருமுனை கூட்டம் என எல்லாவற்றிற்கும் அனுமதி தருவதில் போலீசார் இழுத்தடிக்கின்றனர். மேலும், தொட்டதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கைது என போலீசார் நடந்து கொள்வது சரியானதல்ல.உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தள்ளப்பாடி என்ற சிறு கிராமத்தில், பட்டா கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களை கூட கைது செய்துள்ளனர். போலீசாரின் இந்த மோசமான போக்கு தமிழக அரசின் நற்பெயரைத்தான் சீர்குலைக்கும், எனவே போக்கை மாற்றிக்கொண்டு போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டுமென வற்புத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

nv
ஜன 01, 2025 10:20

அண்ணே அறிவாலய பிச்சை கிடைக்காது!! அப்புறம் உண்டியல் தான் தூக்கணும்!!


vbs manian
ஜன 01, 2025 08:48

ஆச்சர்யம் இவரா இப்படி.


Rajarajan
ஜன 01, 2025 01:31

அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திருச்சு. இனி அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது.


vijay
ஜன 01, 2025 00:28

உங்க கூட்டாளிதானே?, அப்புறம் எதுக்கு ரோஷம், செல்லகோபம் எல்லாம்?. வி சி க தலைமை மாதிரி தோழமை சுட்டுதல் பண்ணிட்டு போங்கப்பா.


தனி
டிச 31, 2024 23:45

காவல்துறை யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என தெரியமா இந்த எலும்பு துண்டுக்கு அலையும் உனக்கு???


krishna
டிச 31, 2024 22:59

ENNA IDHU GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI


sundar
டிச 31, 2024 22:37

கம்மிகளே உங்களை பற்றி மக்களின் மதிப்பீடு என்ன என்பதை இங்கு உள்ள அனைவரின் கருத்துக்களில் இருந்தும் தெரிந்து கொள்ள முயலுங்கள். முதலில் ஹிந்து விரோதப் போக்கைக் கைவிடுங்கள் . கற்பனை உலகை விடுத்து இயல்பு வாழ்க்கையை உணர முயலுங்கள்


பேசும் தமிழன்
டிச 31, 2024 21:23

பழனி பாடம் படிக்க வேண்டும்.... முன்பு பிரதமர் அவர்களுக்கு கருப்பு கொடி காட்டுகிறோம்..... கருப்பு பலூன் விடுகிறோம் என்று சுற்றிய போது.... தூக்கி உள்ளே போட்டு இருக்க வேண்டாமா..... சரி சரி.... பங்காளி என்பதால் சும்மா இருந்தீர்களா ???


தமிழ்வேள்
டிச 31, 2024 20:22

யப்பா உண்டி பாலு, என்னா உங்க மொதலாளி கோடியெல்லாம் கிடையாது... உனக்கு தெருக்கோடியே போதும்னு சொல்லீட்டாரா?... உப்பு கூட தின்னா மேரி கூவி கூப்பாடு போட்டியே? இன்னா மேட்டரு?


Haja Kuthubdeen
டிச 31, 2024 20:14

போலீஸ் துறை யார்வசம் இருக்கு தோழரே!!!ஏன் இந்த நாடகம்.மக்கள் எதுவும் அறியாதவர்கள் என்ற நினைப்பா???


முக்கிய வீடியோ