உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரீல்ஸ் பார்த்தபடி பஸ் இயக்கிய தற்காலிக ஓட்டுநர் பணி நீக்கம்

ரீல்ஸ் பார்த்தபடி பஸ் இயக்கிய தற்காலிக ஓட்டுநர் பணி நீக்கம்

சென்னை: மொபைல் போனில், 'ரீல்ஸ்' பார்த்தபடி, அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற, தற்காலிக ஓட்டுனர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து, 60க்கும் மேற்பட்ட பயணியருடன், சென்னை மாதவரத்துக்கு அரசு பஸ் வந்தது. அதன் ஓட்டுனர், மொபைல் போனில் ரீல்ஸ் பார்த்தபடி, 2 கி.மீ., துாரம் வரை, பஸ்சை கவனக்குறைவாக ஓட்டினார்.இதை, பயணி ஒருவர் தன் மொபைல் போனில் வீடியோ எடுத்திருந்தார். ஆதாரத்துடன் போக்குவரத்து பணிமனையில், அவர் புகார் அளித்தார். இந்த வீடியோவும், சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அந்த ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'வீடியோவில் வரும் ஓட்டுனர், விழுப்புரம் கோட்டம் திருவள்ளூர் மண்டலம், கோயம்பேடு - 2 பணிமனையைச் சார்ந்த தற்காலிக ஓட்டுனர் பார்த்திபன். தவறு செய்த ஓட்டுனர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'தற்போது, அவர் நிரந்தர பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்' என்று, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை