உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிய தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலைக்கு 204வது இடம்

ஆசிய தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலைக்கு 204வது இடம்

சென்னை : கியூ.எஸ்., நிறுவனம் வெளியிட்ட, பல்கலைகளுக்கான ஆசிய தரவரிசை பட்டியலில், இந்திய பல்கலை.கள், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சறுக்கல்களை சந்தித்துள்ளன. தமிழகத்தின் அண்ணா பல்கலை, 177வது இடத்தில் இருந்து, 204வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.உலகின் சிறந்த பல்கலை.களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி செயல்பாடுகளை, பிரிட்டன் நாட்டில் உள்ள லண்டனை சேர்ந்த கியூ.எஸ்., எனும் 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில், பல்கலை.களின் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.அந்த வகையில், ஆசிய அளவிலான சிறந்த பல்கலை.கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய பல்கலை.கள் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சறுக்கல்களை சந்தித்துள்ளன. இந்த ஆசிய பல்கலை தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை, சீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளைச் சேர்ந்த பல்கலை,கள் பிடித்துள்ளன. முதல் 100 இடங்களில், இந்தியாவைச் சேர்ந்த ஏழு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில், ஐ.ஐ.டி., டில்லி 59வது இடம் பிடித்தது. கடந்த ஆண்டு 44வது இடம் பிடித்திருந்தது. கடந்த ஆண்டு 62வது இடத்தில் இருந்த பெங்களூரு ஐ.ஐ.எஸ்., நடப்பாண்டு 64வது இடம்; 56வது இடம் பிடித்திருந்த சென்னை ஐ.ஐ.டி., நடப்பாண்டு 70வது இடம் பிடித்துள்ளது.இதுதவிர, மும்பை ஐ.ஐ.டி., - ஐ.ஐ.டி., கான்பூர், ஐ.ஐ.டி., கரக்பூர், டெல்லி பல்கலைகள் கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு தரவரிசையில் பின்தங்கி உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, மாநில பல்கலையான அண்ணா பல்கலை, கடந்த ஆண்டு 177வது இடம் பிடித்திருந்தது. நடப்பாண்டு, 204வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 280வது பட்டியலில் இருந்த அழகப்பா பல்கலை, நடப்பாண்டு 393வது இடத்துக்கு சரிந்துள்ளது. தனியார் பல்கலைகளான, வி.ஐ.டி., 156; எஸ்.ஆர்.எம்., 226வது இடங்களை பிடித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

c.k.sundar rao
நவ 06, 2025 09:29

Dravidian model sucess to failure and achievements.


Ramesh Sargam
நவ 06, 2025 00:59

அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் சறுக்கியது. காரணம்? அந்த பல்கலை வளாகத்தில் அங்கு அன்று நடந்த அந்த பாலியல் வன்கொடுமை குற்றம். யார் அந்த சார்? இன்றுவரை இதற்கு விடை கிடைக்கவில்லை. கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்: அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன், யாரோ ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சார் என குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, யார் அந்த சார்? என்ற கேள்வி, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதான் முதல் காரணம் தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலையின் பெயர் பின்னோக்கி சென்றதற்கு.


raja
நவ 06, 2025 06:23

அது மட்டும் இல்லை இப்போ அண்ணா பல்கலை கழகத்தின் துணை வேந்தராக தன்னையே முடிசூட்டு வேண்டும் என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசியல் செய்வதாலும் ஏற்கனவே சிண்டிகேட் உறுப்பினராக உள்ள துணை முதல்வர் உதயநிதி இருப்பதாலும் இப்போ பல்கலை கழகம் அரசியல் மேடையாக்கி வேலை வாய்ப்பில் லட்சங்களில் லஞ்சம் வாங்கி தகுதி இல்லாதவர்களை நியமிப்பதாலும் ஆராய்ச்சி என்ற ஒன்று இப்பொழுது அங்கே இல்லை...குட்டி சுவராகி விட்டது.. எல்லாம் தமிழனின் தலைவிதி கேவலம் ருவா ஐநூறுக்கும் ஓசி குவார்ட்டர் கோழி பிரியாணிக்கு ஆசைப்பட்டு இந்த திருட்டு திராவிடர்களை கொண்டுவந்த தால் அனைத்திலும் இப்போ தமிழகம் பின் தங்கி விட்டது ஆனால் சாராயத்தில் கள்ள கடத்தலில் போதை மருந்து கடத்தல் விற்பனை மற்றும் உபயோகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டில் நம்பர் ஒன்னு மாநிலம் என்று பெருமை பட்டு கொள்ளலாம்...


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 06, 2025 09:55

யார் அந்த சார்? இன்றுவரை இதற்கு விடை கிடைக்கவில்லை என்று சொல்லும் நீங்களே பல்கலைக்கு மாசு ஏற்படுத்திய சார் யார் என்று சொல்லி இருக்கலாமே .அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்களை இணையத்தில் வெளியிட்டு அந்த மாணவியை அவமானப்படுத்தியதும் அந்த சார் தானே


Ram
நவ 05, 2025 22:28

இப்போது உண்மையாக கற்பித்தல் செய்வோரை மதிப்பதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை