உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 நாள் கூட்டம் முடிந்தது சட்டசபை ஒத்திவைப்பு

6 நாள் கூட்டம் முடிந்தது சட்டசபை ஒத்திவைப்பு

சென்னை:தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.சட்டசபை, 6ம் தேதி கூடியது. நடப்பாண்டின் முதல் நாள் கூட்டம் என்பதால், கவர்னர் உரை நிகழ்த்துவார் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக வந்த கவர்னர் ரவி, தேசிய கீதம் வாசிக்கப்படாததால், உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார்.இதையடுத்து, அந்த உரையை சபாநாயகர் படித்தார். பின்னர், அது தொடர்பான விவாதம், நேற்று முன்தினம் வரை நடந்தது. அதற்கு நேற்று முதல்வர் பதிலுரை வழங்கினார். இதன்பின், சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பெரிய அளவில் பிரச்னையில்லை

எதிர்பார்த்த போலீஸ் ஏமாற்றம்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் வழங்காதது, பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள், மதுரை டங்ஸ்டன் பிரச்னை தொடர்பாக, பெரிய அளவில் அ.தி.மு.க.,வினர் பிரச்னையை கிளப்புவர் என, போலீசார் எதிர்பார்த்தனர்.சட்டசபையில் அமளி, சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கலாம் என, உளவுத்துறை வாயிலாக, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பிரச்னைகளை சமாளிப்பதற்கு வசதியாக, தலைமை செயலகத்திற்கு வெளியே உள்ள வாகன நிறுத்தத்தில், மாநகர பஸ்கள் உள்பட ஏராளமான போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மட்டுமின்றி, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் தயார் நிலையில், ஆறு நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.தலைமை செயலகத்தை சுற்றி முக்கிய சந்திப்புகளில், போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அ.தி.மு.க.,வினர் அடக்கி வாசித்ததால், பெரிய அளவில் பிரச்னைகள் எழவில்லை. சபையில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றம், வெளிநடப்பு என சிறு சிறு சம்பவங்கள் மட்டுமே நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி