உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை பக்கம்

சட்டசபை பக்கம்

அரசு கேபிள் 'டிவி'

மேலாண்மை தொடர்பாக, உலகின் தலைசிறந்த பல்கலைகளில் நான் படித்தவன். பெரிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக வேலை செய்தவன். நிறுவனங்களை எப்படி நடத்த வேண்டும் என்பது ஓரளவிற்கு எனக்கு தெரியும். எது நல்லது; எது தவறு என்ற அனுபவமும், தெளிவும் பெற்றவன்.

அந்த அடிப்படையில் கூறினால், தமிழக அரசு கேபிள் 'டிவி' போல, மோசமான நிறுவனத்தை என் வாழ்க்கையில் நான் பார்த்தது இல்லை.தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, 525 கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலையில், அரசு கேபிள் 'டிவி' இருந்தது. அனலாக்கில் இருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு முன், கேபிள் ஆப்பரேட்டர்களிடம் 270 கோடி ரூபாய் பெற வேண்டி இருந்தது. தமிழக அரசு கேபிள் நிறுவனம், ஐ.சி.யூ.,வில் இருக்கிறது; அங்கு ஆக்சிஜன் கிடையாது. அதற்கு மின்சாரம் வழங்குவது ஒப்பந்ததாரர்களிடம் உள்ளது; அந்த ஒப்பந்ததாரர் சீனா சிஸ்டத்தில் உள்ளார்.- தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி