உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  20ம் தேதி வரை சட்டசபை கூட்டம்

 20ம் தேதி வரை சட்டசபை கூட்டம்

சென்னை: சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடந்தது. பின், சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: வரும் 2026 - 27ம் ஆண்டுக்கான இடைக்கால பொது பட்ஜெட்டையும், வேளாண் துறை தனி பட்ஜெட் டையும், அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து, என் அறையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. இன்றும், நாளையும் இடைக்கால பட்ஜெட்கள் மீது விவாதம் நடக்கும். காலையில், கேள்வி நேரம் உண்டு. நாளை மறுநாள் கேள்வி நேரம் கிடையாது. நிதி அமைச்சர், வேளாண் அமைச்சர் ஆகியோர் விவாதத்திற்கு பதிலுரை வழங்குவர். தொடர்ந்து, முன்பண மானிய கோரிக்கை, 2025 - 26ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள், விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி