உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயை பின்னணியில் இருந்து பாஜ இயக்குகிறது; சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

விஜயை பின்னணியில் இருந்து பாஜ இயக்குகிறது; சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

நெல்லை; நடிகர் விஜயின் பேச்சில் அகந்தை அதிகம் உள்ளது. முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே அவரை பாஜ தான் இயக்குகிறது என்பது தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் பேசினார். அப்போது, அண்மையில் சுற்றுப்பயணம் சென்ற தவெக தலைவர் நடிகர் விஜய், திமுக பற்றியும், முதல்வர் ஸ்டாலினை சார் என்று அழைத்தது பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=77ew5e0g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு அப்பாவு அளித்த பதில் வருமாறு;நம்ப தம்பி, நடிகர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் அவர் பேசுவதை நீங்களே பார்க்கும் போது சிஎம் சார் என்று சினிமாவில் பேசுவது மாதிரி பேசுகிறார். கொஞ்சம் அகந்தை அதிகமாக வார்த்தைகளில் இருக்கிறது. இந்த அகந்தை இருக்கக்கூடாது. என்ன தைரியத்தில் இந்த அகந்தை வருகிறதோ தெரியவில்லை. கட்சி ஆரம்பிக்கச் சொல்லி புஸ்சி ஆனந்துக்கு அமித் ஷா சொல்லி, அதன் மூலமாகத் தான் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. வருமான வரித்துறையில் பழைய இணை ஆணையர் அருண்ராஜ், அவரிடம் (நடிகர் விஜய்) இருக்கிறார். அவரின் தொடர்பில் அமித்ஷா, பிரதமர் வழிகாட்டுதலில் கட்சி ஆரம்பித்ததாக பல பத்திரிகைகளில், ஊடகங்களில் செய்திகள் சொல்லி வருகின்றன. அவர்கள் தான் இவர் (நடிகர் விஜய்) கேட்காமலே ஒய் பாதுகாப்பு பிரிவு கொடுத்திருப்பதாக செய்திகளில் சொல்கின்றனர். மத்திய அரசு மூலமாக தனி விமானமே கொடுத்திருப்பதாக சொல்கின்றனர். ஆனால் எனக்கு தெரியவில்லை. அவர்கள்(பத்திரிகைகள், ஊடகங்கள்) சொன்னதை தான் நான் சொல்கிறேன்.எனவே பின்புலத்தில் அவர்கள்(பாஜ) இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் அந்த அகந்தையில் பேசுவது மாதிரி பலரும் சொல்கின்றனர். அதற்கு உதாரணம்.. நான்(விஜய்) ஒரு பிரசாரத்திற்கு வருகிறேன் என்றால் எனக்கு இவ்வளவு கண்டிஷன்கள் காவல்துறையினர் போடுகின்றனர். ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இப்படி நீங்கள்(தமிழக அரசு) கண்டிஷன் போட முடியுமா? சிஎம் சார் போட்டு தான் பாருங்களேன்? என்று சொன்னதில் இருந்தே தெரிகிறது அவர்கள்(பாஜ) தான் இவரை(நடிகர் விஜய்) இயக்குகிறார்கள் என்று. அந்த வார்த்தையிலே அர்த்தம் இருக்கிறது.அவருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியவில்லையோ என்று நான் நினைக்கிறேன். பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் மற்றும் உங்களின் புரோட்டோகால் (protocol) என்ன? பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ, முதல்வரையோ பேசும் போது கண்ணியக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மாண்புமிகு முதல்வர் அவர்களே என்றுதான் சொல்ல வேண்டும். மாண்புமிகு பாரத பிரதமர் என்றுதான் சொல்ல வேண்டும். மாண்புமிகு உள்துறை அமைச்சர் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, அவர்களை பெயரைச் சொல்லி அழைப்பதற்கோ, சினிமாவில் டயலாக் பேசுவது போல பேசுவதையோ மக்கள் விரும்பவில்லை.ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார், ஏன் இப்படி புரியாமல் பேசுகிறார் என்று மக்கள் நினைக்கின்றனர்.இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேட்டியில் கூறினார்.பேட்டியின் போது, அப்பாவு எங்கேயும் நடிகர் விஜய் என்றோ, தவெக தலைவர் விஜய் என்றோ அவரது பெயரை உச்சரிக்கவில்லை. மாறாக அவர் என்றும், அந்த தம்பி என்றும் குறிப்பிட்டேச் சொன்னார் என்பது கவனிக்கத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

joe
செப் 23, 2025 12:58

டெல்லியில் உன் சபா நாயக்கர் பதவியை கேலிக்கூத்தாடியதை மறந்தாயோ ?


Mani . V
செப் 23, 2025 05:33

சரி திமிங்கிலம், அவரை யார் முன்னாளில் இருந்து அல்லது பின்னாளில் இருந்தது இயக்குகிறார்கள்? என்பது முக்கியமல்ல. மக்களின் வரிப்பணத்தில் உனக்கு சம்பளம் கொடுப்பது சபாநாயகர் பதவிக்கு. ஆனால், நீயோ எட்டாம் தரம் மாதிரி கட்சிக்கு முட்டுக் கொடுக்கிறாய். நீ அந்த குடும்பத்துக்கு ஊத வேண்டும் என்றால் உன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு என்ன வேண்டுமானாலும் செய்து தொலை. சபாநாயகர் நாற்காலியில் உட்கார வைத்ததே தவறு.


கடல் நண்டு
செப் 23, 2025 03:50

சாத்தான் வேதம் ஓதுகிறது .. அக்மார்க் கிறித்தவ மத வெறி பிடித்த அங்கி போடாத மிஷனரி..


panneer selvam
செப் 23, 2025 00:16

Appavu ji , being you are an evangelist and spokesperson of Churches , Just seek intervention of Cardinals , Bishops , Priests and Nuns to neutralize the Vijay .Being a Christian ,Vijay will definitely listen to them and he will soften his criticisms against DMK and re-direct to Modiji


Varadarajan Nagarajan
செப் 22, 2025 23:59

அதுசரி. தங்கள் கட்சி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை இயக்குவது யாரென்று சொல்லுங்கள். விலைவாசி உயர்வைப்பற்றி எப்பொழுதும் போராட்டம் நடத்தும் சிவப்புத்துண்டு கட்சி கூட தங்கள் ஆட்சியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம்முதல் எந்த வரியுயர்வைப்பற்றியும் ஒரு கண்டணம்கூட தெரிவிக்காமல் கொத்தடிமைகளாக இருக்கின்றார்கள். இப்படி எல்லாவற்றையும் இயக்குபவர்கள் யார் என்று சொல்லுங்களேன்.


Vasan
செப் 22, 2025 22:01

வானளாவிய அதிகாரம் உங்களுக்கு உள்ளது. விஜய்க்கு சபாவின் உள்ளே அனுமதி தராதீர்கள்.


Sundaran
செப் 22, 2025 19:39

காசுக்காகவும் பதவிக்காகவும் கட்சி மாறி ஓடுபவர் பிறரை விமரிசிக்க தகுதி இல்லை .


திகழும் ஓவியன்,
செப் 22, 2025 19:06

நீர் என்ன கதறினாலும் விஜய் உங்களின் பீ டீம் என்பது பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். இதுக்கு எல்லாம் சபா போஸ்ட் டூ மச்


Natarajan Mahalingam
செப் 22, 2025 19:00

ஆமாம். பின்னனியில் இருந்து பாஜக வும் மற்றும் முன்னயில் இருந்து திமுக வும் இயக்குகிறது.


sankaranarayanan
செப் 22, 2025 18:40

இவர் என்ன அரசியல் தலைவரா இல்லை அசம்பலி தலைவரா என்றே தெரியவில்லை மவுனமாக இருந்தால் இவர் வகிக்கும் பதவிக்கு நல்லது இல்லை இருக்கும் ஓர் அமைச்சர் பதவி கொடுத்து அலங்கரிக்கலாம்


முக்கிய வீடியோ