உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடியில் போலீஸ் அவுட்போஸ்ட் மீது தாக்குதல்: மர்ம கும்பலுக்கு வலை

தூத்துக்குடியில் போலீஸ் அவுட்போஸ்ட் மீது தாக்குதல்: மர்ம கும்பலுக்கு வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் நான்கு வழி சாலையில் உள்ள போலீஸ் அவுட் போஸ்டை (புறக்காவல் நிலையம்) நேற்று இரவு மர்ம கும்பல் தாக்கியது. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாட்டில், திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே அவுட்போஸ்ட் எனப்படும் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு போலீசார் இல்லாத நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை உடைத்தும், அரிவாளால் வெட்டிச் சேதப்படுத்தியும் விட்டுச் சென்றனர்.இதனை அறிந்த முறப்பநாடு போலீசார், எதிரே உள்ள ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, புறக்காவல் நிலையத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V K
செப் 14, 2025 23:05

தமிழகம் அமைதி பூங்கா அதை சொல்ல கவர்னர் தயங்குகிறார் சட்டசபைல எழுதி கொடுத்தால் கூட படிக்க மாடேங்குகிறார்


Nandhagopal R
செப் 14, 2025 15:51

திராவிட மாடல்


Sivaram
செப் 14, 2025 14:17

துருப்பிடித்த இரும்புக்கரம் பேரிச்சம்பழம் திருவாரூர் காரர். இப்படி எல்லாம் சொல்லலாமா. பெரம்பூர் பாபு கோபித்து கொள்ள போகிறார்


Kulandai kannan
செப் 14, 2025 14:06

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கோஷ்டியா?


ஆரூர் ரங்
செப் 14, 2025 11:47

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே ஏர்போர்ட் மூர்த்தி மீது விசி ஆட்கள் தாக்குதல்.இப்போ போலீஸ் அவுட் போஸ்ட் மீது தாக்குதல். ஆக சிரிப்பு போலீஸ் இலாகாவை வைத்துள்ள ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம் பேரீச்சம் பழத்துக்கு போடப்பட்டு விட்டதா?


முக்கிய வீடியோ