உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் : 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் : 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் யுடியூபர் சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு குடியிருக்கும், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை, நேற்று முன்தினம்( மார்ச் 24) ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தினர். அப்போது வீட்டில், சங்கரின், 68 வயதான தாய் கமலா இருந்தார். இச்சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டு உள்ளார்.இந்த சம்பவத்தின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் இருப்பதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டி உள்ளார்.இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., சசிதரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மணி
மார் 27, 2025 02:58

எய்தவன் எப்ப கைது ? ஏமாற்று நாடகம்


Appa V
மார் 27, 2025 00:46

துப்புரவு தொழிலாளர்கள் யாரும் இந்த அட்டூழியத்தில் ஈடுபடவில்லை என்று இன்று தெரிவித்திருக்கிறார்கள் ..


MARUTHU PANDIAR
மார் 27, 2025 00:08

சர்வ சாதாரணம் .


Kanns
மார் 26, 2025 22:51

Slap Goonda Case Against All Involved & Conspiring Accused Without Bail till Trial Ends in Convictions


சங்கி
மார் 26, 2025 22:47

இந்திரா காந்தியேயை அசிங்கபடுத்தியவர்கள் திருடர்கள். சவுக்கு சங்கர் எம்மாத்திரம்


Raj S
மார் 26, 2025 21:36

யாராவது ரெண்டு பேர புடிச்சி உள்ள போட்டாச்சினு ஒரு உதார் உட்டா அது தான் திருட்டு திராவிட மாடல்... இன்னும் அந்த சார் யாருனு நம்ம மா.சு சொல்ல மாட்டேங்கறாரு


krishna
மார் 26, 2025 21:11

IDHU DRAVIDA MODEL AATCHI.JAILIL KARI VIRUNDHU NICHAYAM.JAAMINIL VELIYE VANDHADHUM THURU PIDITHU IRUMBU KARAM IVARGALAI THYAGI ENA VAAZHTHI COFFEE KODUTHU PAARAATUVAAR


nagendhiran
மார் 26, 2025 21:05

சம்பரதாய கைது?


kamal 00
மார் 26, 2025 20:50

அவங்களுக்கு அடி குடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை