உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி; பாக்., நபர் பஞ்சாபில் சுட்டுக்கொலை

இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி; பாக்., நபர் பஞ்சாபில் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் பஞ்சாபில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான்- இந்தியா இடையே பதற்றங்கள் அதிகரித்து உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி இந்தியா தக்க பாடம் புகட்டி உள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பஞ்சாபின் பெரோஸ்பூரில் உள்ள எல்லைப் பகுதி வழியாக இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தானை சேர்ந்த அந்த நபர் இரவு நேரத்தில், சர்வதேச எல்லையைக் கடந்து ஊடுருவ முயற்சி செய்ததை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார் என பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
மே 08, 2025 21:32

கண்டதும் சுடவேண்டும். இதுதான் மக்கள் எதிர்பார்ப்பது. அதைவிட்டுவிட்டு அவர்களை சிறைபிடிப்பது, இந்திய சிறைகளில் அடைத்து சோறு போடுவது... அதெல்லாம் சரிப்பட்டு வராது.


A1Suresh
மே 08, 2025 15:24

வேலியை தாண்டுவோர் 4 பேரை சுட்டு கொன்றால், அனைவருக்கும் பயம் வரும்.


A1Suresh
மே 08, 2025 15:23

சுடவேண்டும் என்று இப்பொழுதாவது நெஞ்சுரம் வந்ததே, மகிழ்ச்சி


veeramani hariharan
மே 08, 2025 15:14

At this juncture shooting at sight is the right decision


MARUTHU PANDIAR
மே 08, 2025 14:22

அங்க மூர்க்கன் ஒவ்வொருத்தனும் பயங்கர வெறியில் இருக்காப்ல.


VSMani
மே 08, 2025 14:17

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை பஞ்சாபில் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொல்வதற்குப் பதில் கைது செய்திருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


Prasanna Krishnan R
மே 08, 2025 16:14

நீங்களும் இதே வழியில் சுடப்படலாம்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மே 08, 2025 17:15

அவர்கள் பாணியில் பதில்.


VSMani
மே 08, 2025 14:13

தாக்குதல் நடத்தி இந்தியா தக்க பாடம் புகட்டி உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை