உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி பயங்கரவாத தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சதிகாரன் கைது

ஆஸி பயங்கரவாத தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சதிகாரன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சதிகாரன் கோமாவில் இருந்து மீண்டதும், கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே, சுற்றுலா தளமான பாண்டை கடற்கரையில், யூத சமூகத்தினரின் ஹனுக்கா பண்டிகையில், கூடியிருந்த மக்கள் மீது பயங்கரவாதிகள் இருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இது தவிர, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதை பயங்கரவாத தாக்குதல் என்று ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மற்றொருவரை பொதுமக்களே தாக்கி மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள், சாஜித் அக்ரம், 50, மற்றும் அவனது மகன் நவீத் அக்ரம், 25, என அடையாளம் காணப்பட்டனர். இதில் பிடிபட்ட நவீத் அக்ரம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.சாஜித் அக்​ரம் ஹைத​ராபாத்​தின் டோலிசவ்கி நகரத்தை பூர்​வீக​மாக கொண்​ட​வன். கடந்த 1998ம் ஆண்டு மாணவர் விசா​வில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு குடிபெயர்ந்​து​விட்​டாரன் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவன் தாக்குதல் நடத்திய பிறகு சுட்டுக்கொல்லப் பட்டதால் உறுதிசெய்ய முடியவில்லை. இந்த சூழலில், தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதி நவீத் அக்ரம் கோமாவில் இருந்து மீண்டதும், மருத்துவமனையில் படுக்கையில் கைது செய்யப்பட்டான். அவன் மீது ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டு மற்றும் 15 கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடூரனிடம் விசாரணை நடக்கிறது. பின்னர் தான் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து முழு விபரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Oviya vijay
டிச 17, 2025 21:57

இரும்புக் கரம் கண்டன அறிக்கை வெளியிட்டு அவனை கைதில் இருந்து விடுவிக்க முயற்சி எடுப்பார்கள். அப்படியே பிரதமருக்கு ஒரு கடிதம்...அவ்ளோ தான்


Skywalker
டிச 17, 2025 20:21

Wow there is a city called Hyderabad in pakistan! I never knew about this, I thought he was from Hyderabad India


Thravisham
டிச 17, 2025 21:10

Man is a social animal by nature. He must be confined in solitary prison with no sunlight or any other light and dead silence.


சண்முகம்
டிச 17, 2025 19:33

He is from Pakistan's Hyderabad.


Anu Sekhar
டிச 17, 2025 18:11

இவங்களுக்கெல்லாம் எதுக்கு சிகிச்சை . காட்டில் விலங்குகளுக்கு கொடுத்திருக்கலாம். அந்த மக்களை கொலை பண்ணினவர்களுக்கு அவர்கள் பணத்தை செலவுபண்ணுவது என்ன நியாயம் . எது மனிதாபினமன் இல்லை


ராகுல்
டிச 17, 2025 16:15

சதிகாரனை சிறையில் அடைத்து நைய புடைங்க


ram
டிச 17, 2025 16:11

இந்தியா மாதிரி மட்டன் சிக்கன் என்று புரத சத்து உணவு கொடுக்கமால் இருந்தால் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை