உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையில் கிடந்த ரூ.3 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்; குவிகிறது பாராட்டு

சாலையில் கிடந்த ரூ.3 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்; குவிகிறது பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொள்ளையடித்த கும்பல் ரோட்டில் தவறவிட்ட ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு மொபைல் போனை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிகிறது.திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு புன்னியவாளன்புரம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் வள்ளியூரை சேர்ந்த முருகன்(வயது 50) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கான விற்பனை பணம் ரூ.36 லட்சத்து 6 ஆயிரத்தை முருகன் ஒரு பையில் எடுத்துக்கொண்டு மொபட்டில் வங்கி நோக்கி சென்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e0hqimhd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அவரை ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வழிமறித்து பணத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றது. அதில் ரூ.3 லட்சம் பணம் கீழே விழுந்தது. ஆனால் அதிர்ச்சியில் இருந்த முருகன் மொபட்டையும், செல்போனையும் கீழே போட்டுவிட்டு பணத்தை கவனிக்காமல் பெட்ரோல் பங்கிற்கு ஓடினார். அவர் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கீழே விழுந்த பணத்தை அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன், விபத்தில் யாரேனும் சிக்கி பணத்தை அங்கேயே விட்டு சென்று விட்டார்களோ என நினைத்து அந்த பணத்தை எடுத்து பணகுடி போலீசில் ஒப்படைத்தார்.நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணனை, போலீசார் பாராட்டினர்.சக ஆட்டோ டிரைவர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
மே 06, 2025 19:54

திருநெல்வேலி என்றாலே கத்தி குத்து, கொலை என்றுதான் இதுவரை செய்தி படித்திருக்கிறேன். இப்பத்தான் மன ஆறுதலாக ஒரு நல்ல செய்தி. அந்த ஆட்டோ ட்ரைவர் மற்றும் குடும்பம் கடவுள் அருளால் சிறப்பாக இருக்கட்டும்.


KRISHNAN R
மே 06, 2025 19:38

நல்ல மனம். வாழ்க


Padmasridharan
மே 06, 2025 18:32

இந்த காக்கிச்சட்டைக்கு பாராட்டுக்கள் மட்டுமல்ல தரவேண்டியது, வீட்டில் ஒருவருக்கு வேலையும்தான். . .லஞ்சம் வாங்கிய ஒரு காவல் காக்கிச்சட்டையை suspension / transfer தராமல் Dismiss செய்துவிட்டு அங்கிருக்கும் வேலையையும் தான்


v.r.rajagopalan
மே 06, 2025 17:23

Great.


Mani . V
மே 06, 2025 16:40

வாழ்த்துக்கள். ஆனால் தவறான இடத்தில் கொடுத்து விட்டார்.


என்றும் இந்தியன்
மே 06, 2025 16:33

ஒரு ஆட்டோ டிரைவர் ரூ 3 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இவர் நேர்மைக்கு நிச்சயம் பாராட்டப்படவேண்டும். கடந்த 2 நாட்களுக்கான விற்பனை பணம் ரூ.36 லட்சத்து 6 ஆயிரத்தை முருகன் ஒரு பையில் எடுத்துக்கொண்டு மொபட்டில் வங்கி நோக்கி சென்றுள்ளார்.???ரூ 36 லட்சம் ஒரு மொபெட்டில் எடுத்துக்கொண்டு???? ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வழிமறித்து பணத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றது. ???அப்போ இது Preplanned திருட்டு என்று அர்த்தம்.


sasidharan
மே 06, 2025 15:01

மனிதம் இன்னும் மரிக்கவில்லை


எஸ் எஸ்
மே 06, 2025 14:55

வங்கிக்கு பெரும்பணத்துடன் செல்லும்போது ஆட்டோ அல்லது டாக்ஸியில் தகுந்த துணையுடன் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லையா?


முக்கிய வீடியோ