உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; விரைவில் அறிவிக்கிறது அரசு

ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; விரைவில் அறிவிக்கிறது அரசு

சென்னை : தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. இரவு நேரத்தில், இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. இது அமலுக்கு வந்து, 11 ஆண்டுகளாகி விட்டது. புதிய கட்டணம் நிர்ணயிக்க கோரி, ஆட்டோ தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும்போது, 'ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக, பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்களின் விபரங்களை சேகரித்துள்ளோம். புதிய கட்டண விபரத்தை, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில், புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Gopalan
டிச 18, 2024 17:53

அரசு ஆட்டோ கட்டணத்தை மீட்டர் இல்லாத GPS முறையில் கட்டணம் வசூலிக்க செயலி ஒன்றை கொண்டு வர வேண்டும். இங்கு இருக்கும் ஓலா உபர் செயலிகளை நிறுத்த வேண்டும். சமயத்தில் இவர்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும். இதனால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.


Ramaswamy Jayaraman
டிச 18, 2024 15:18

தமிழகத்தில் ஆட்டோவுக்கு மீட்டர் எதற்கு. ஒருவருமே அதை கடைபிடிப்பதில்லை. கொள்ளை அடிக்கிறார்கள். சென்னையில் மினிமம் ஒரு கிலோமீட்டருக்கு 50 ரூபாய். அதை தாண்டினால் வாயில் வந்த ரேட்.. இது ஓலா ஆட்டோவுக்கும் பொருந்தும். ஓலா ஆட்டோக்காரர்கள் ஓலா ஆப்பில் காட்டுவதற்கு மேல் பணம் கொடுத்தால் வருகிறார்கள். கான்செல் செய்ய சொன்னால் அசிங்கமான வார்த்தை பயன் படுத்துகிறார்கள். இந்த நிலையில் ஆட்டோவுக்கு எதற்க்காக புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய கட்டணம் வந்தாலும் இதே நிலைதான்.


ram
டிச 18, 2024 13:43

சென்னையில் ஓடும் முக்கால்வாசி ஆட்டோக்களுக்கு பெர்மிட் லைசென்ஸ் கிடையாது. இதை முதலில் சரி பண்ணனும் இந்த அரசு.


ram
டிச 18, 2024 13:42

மீனம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், பழவந்தாங்கல் போன்ற பகுதிகளில் ஷேர் ஆட்டோ கிடையாது ஆதலால் ஒரு கிலோமீட்டருக்கு நூறு அதற்குமேல் வசூல் செய்கிறார்கள். பொது மக்கள் இதை பத்தி கேட்டால் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவானுகள் இல்லை என்றால் நடந்து போ என்று ஏளனமாக பேசுவனுக. அரசு இந்த பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோ ஓட்ட permission கொடுத்தால் நன்றாக இருக்கும். மீனம்பாக்கம் மெட்ரோவில் இருந்து நங்கநல்லூர், மடிப்பாக்கம் போக வேண்டி இருந்தால் குறைந்தது இருநூறு இல் இருந்து முன்னுறு ருபாய் வைத்துஇருக்கணும்.


sankaranarayanan
டிச 18, 2024 12:41

ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக, பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம் என்று அரசாங்கத்திற்கு கொண்டுபவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் எவ்வளவு செயலியோ அல்லது புதிய மீட்டர்கள் கொண்டுவந்தாலும் அது ஒரு கண் துடைப்புதான் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை அரசாங்கம் கொண்டுவரும் எந்த திட்டத்தையுமே ஆட்டோகாரர்கள் அமல் செய்வது கிடையாது அரசாங்கமும் அமல்படுத்த வழிமுறைகளை பின்பற்றுவதில்லை தவறு செய்பவர்களை தண்டிப்பதே இல்லை. இந்தியாவிலே திராவிட நாடு மட்டுந்தான் இந்த ஆட்டோ அராஜகம் நடக்கிறது வேறு எந்த மாநிலத்திலும் இந்த ஆட்டோ அராஜகம் கிடையாது மீட்டர் வெறும் பொம்மையாக இருக்கும் அது இயக்கப்படுவதில்லை போலீசும் கண்டுகொள்ளாது கம்பளைண்ட் செய்தாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள் கொடுத்துவிட்டு போங்களேன் என்பார்கள் அண்மையில் இருக்கும் கம்யூனிஸ்ட் மாநிலமான கேரளாவில் ஆட்டோவில் சென்றால் மீட்டர் போடுவார்கள் உடனே மீதம் பணத்தையும் அவர்களே நம்மிடம் கேட்காமலே கொடுப்பார்கள் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் அப்படியேதான் நடக்கிறது திராவிட ஆட்சியில்தான் இந்த அலங்கோலம் அராஜகம் அக்கிரமம்


visu
டிச 18, 2024 19:48

மீட்டர் தேவையில்லை ஓலா உபேர் போல அரசே ஆப் கொண்டுவந்தால் எந்த ஆட்டோ ஓட்டுநர் எந்த பயணியை ஏற்றி செல்கிறார் ஆட்டோ முறைப்படி பதிவு செய்யப்பட்டதா ஓட்டுநர் உரிமம் உள்ளதா எவ்வளவு கட்டணம் எல்லாம் தெரிந்துவிடும்.பயணிக்கு பாதுகாப்பு கிடைக்கும்.


sridhar
டிச 18, 2024 11:57

எதுக்கு மீட்டர் ? யார் மீட்டர் போட்டு ஓட்டறாங்க . எல்லாம் வாய்மொழி fare தான் .


MADHAVAN
டிச 18, 2024 11:31

முதலில் மீட்டர் இருக்கானு பாருங்க


Ravi Kumar
டிச 18, 2024 11:29

இன்னும் 95 சதவிகிதம், பேச்சு, நடத்தை மோசமாக உள்ளது. அடாவடி, வசூல் , நிறைய மாறனும் ,


Ganesh Srinivasan
டிச 18, 2024 10:56

எந்த பிரயோசனமும் இல்லை. யாரும் மீட்டர் போடப்போவதில்லை


Rajan
டிச 18, 2024 10:39

முதல்ல மீட்டர் போடுங்க. மினிமம் 100 வாங்குகிறார்கள். அரசு முதலில் இதை கட்டுப்படுத்தட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை