உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவு

அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழகம் முழுதும் அனைத்து அரசு பஸ்களிலும், விரைவில் தானியங்கி கதவு அமைக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - ஜெயகுமார்: ஈரோட்டில் இருந்து திருப்பூர் வழியாக பெருந்துறை செல்லும் பஸ்கள், இடையில் உள்ள விஜயமங்கலம் உள்ளிட்ட முக்கியமான ஊர்களுக்கு வராமல், மேம்பாலம் வழியாக செல்கின்றன.இதனால், இந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.கடந்த பிப்ரவரி 6ல் கூட்டம் அதிகமாக இருந்ததால், தனியார் பஸ் கவிழ்ந்து, படிக்கட்டில் பயணித்த, பெருந்துறையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது போன்ற விபத்துகளை தவிர்க்க, அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவு அமைக்க வேண்டும்.அமைச்சர் சிவசங்கர்: அரசு பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கும் பணி, சென்னை மாநகரில் முடிந்துள்ளது. மற்ற பகுதிகளிலும் படிப்படியாக, அரசு பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்.பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram pollachi
மார் 28, 2025 17:23

மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்களுக்கு காப்பீட்டு செய்ய வேண்டும் ஆனால் அரசு வாகனங்களுக்கு காப்பீட்டு செய்வது கிடையாது எனவே பயணிகள், நடத்துநர் தவறி விழுந்தால் ஒரு நிவாரணம் கூட கிடைக்காது.... நீதிமன்றத்தின் கதவை தட்ட வேண்டும் அதற்கு பதில் இந்த கதவு எப்போது திறக்கும் அடுத்த வண்டியை ஓடி பிடிக்க இது தடையாக உள்ளது என புலம்பும் பயணிகள். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பேருந்துகள் தினமும் ஒன்று வீதம் கதவு அமைப்பதற்காக பொள்ளாச்சி பணிமனைக்கு வருகிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 28, 2025 10:32

செலவுக்கணக்கு எழுதும்போது, பேருந்து வாங்கியதாக எழுதாமல் பேருந்துகளுக்கு கதவு போட்டதை மட்டும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


பாமரன்
மார் 28, 2025 08:46

வாகன விதிகள் படி அனைத்து விதமான பஸ்கள் பயணிகள் வாகனமாக உபயோகிக்கும் பட்சத்தில் கதவுகள் இருக்கனும்னு சொல்லுது... கதவுகள் இல்லாமல் ரிஜிஸ்டர் எப்படி ஆனது..?? பஸ்களை ஒழுங்கா பராமரித்து விடுங்கய்யா முதலில் ... இல்லைன்னா இன்னொரு லிப்ஸ்டிக் காமெடி ஆகிடும்...


Sivagiri
மார் 28, 2025 08:23

அந்தந்த ஸ்டாப் வந்தவுடன் தானா நின்னு பயணிகளை ஏற்றுக் கொண்டு செல்லுமாறு, சென்சார், சிக்கனல்கள் நிறுவ வேண்டும் , பாம்பே லோக்கல் ட்ரெயின் போல . . .


Matt P
மார் 28, 2025 08:10

ஓட்டை பஸ் இருக்கை கிழிஞ்ச பஸ்களுக்கு கதவு மட்டும் திடமாக போட்டிருவாங்க போலிருக்கு. இங்கிருந்து யாரும் தப்ப முடியாது என்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை