உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பெண்கள் சாதனை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பெண்கள் சாதனை

மதுரை : மிகவும் எதிர்பார்ப்புடனும், வீரச் செறிவுடனும் துவங்கும், மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க, இந்தாண்டு, ஆச்சரியமூட்டும் வகையில், பெண்களும் மாடுகளை அழைத்து வந்திருந்தனர். நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், 16 பெண்கள், 5 திருநங்கையர், வீரத்துடன் தங்கள் காளைகளை அழைத்து வந்திருந்தனர். தைப்பொங்கலையொட்டி மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று, அவனியாபுரத்தில் நடந்தது. 2026 காளைகள் பங்கேற்க, முன்பதிவு செய்யப்பட்டிருந்தன; 1735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். கலெக்டர் சங்கீதா தலைமையில் விழா ஒருங்கிணைப்புக்குழு, அனைத்து சமூக பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது.அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாடிவாசல், தடுப்புகள், விழா மேடை அமைக்கப்பட்டது. மைதானம் தென்னை நார்களால் பரப்பப்பட்டிருந்தது. காலை 6:30 மணிக்கு கலெக்டர், 'விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்யமாட்டோம். நெறிமுறைகளை பின்பற்றுவோம். அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடுவோம்' என உறுதிமொழி வாசிக்க அதை பின்பற்றுவதாக வீரர்கள் உறுதியேற்றனர். காலை 6:35 மணிக்கு அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து, போட்டியை துவக்கி வைத்தார்.காளைகளுக்கு, கால்நடைத் துறையினர் மருத்துவப் பரிசோதனை செய்தனர். 925 காளைகளில் தகுதி நீக்கம் செய்தது போக, மொத்தம், 10 சுற்றுகளில், 888 காளைகள் அனுமதிக்கப்பட்டன; இதில் 16 பெண்கள், 5 திருநங்கையருக்கு சொந்தமான காளைகளும் அடக்கம். 'முடிந்தால் பிடித்துப் பார், தொட்டுப்பார்...' என, காளைகள் சீறிப் பாய்ந்தன. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபின் தகுதியான, 900 மாடு பிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இறுதிச் சுற்று போட்டி, மாலை 5:00 மணிக்கு துவங்கியது. லேசான மழை பெய்தது; அதை பொருட்படுத்தாமல் போட்டி விறுவிறுப்பாக நடந்தது.பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, தங்க நாணயம், எவர் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், பரிசுகளாக வழங்கப்பட்டன.அமைச்சர் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.பி.,க்கள் வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.,க்கள் பூமிநாதன், வெங்கடேசன், ராஜன் செல்லப்பா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் பங்கேற்றனர். போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.

வீரர் மரணம்

மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர், நவீன்குமார், 22. மாடுபிடி வீரரான இவரின் முகம், தாடை பகுதியில் காளை முட்டியதில், காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மற்றொரு வீரரான மதுரை தனக்கன்குளம் கண்ணன், 28, பார்வையாளர் அவனியாபுரம் சுரேஷ் உட்பட, 45 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒன்பது பேர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இன்று, பாலமேடு; நாளை அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு ந-டக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

S MURUGAN
ஜன 15, 2025 16:46

To prevent damage given by bulls, government should provide Bullet proof or horn hit proof shirt to all competitors at the time of play.The same shirts can be taken back after game for the next year use.I think this will prevent death and severe hits


Svs Yaadum oore
ஜன 15, 2025 13:18

பால் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மாடுகளின் எண்ணிக்கை, சாணம் எப்படி குறையுமா என்று கேள்வி ??....ராஷ்டிரிய கோகுல் மிஷன் RGM எனப்படும் உள்நாட்டு மாடு இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு திட்டம் மத்திய அரசு ஏன் செயல்படுத்துது ??...ஒரு நாட்டு மாடு 4 லிட்டர் பால் தான் சுரக்கும் ....1992ல், 18.93 கோடியாக இருந்த நாட்டு மாடுகளின் எண்ணிக்கை, கடந்த, 2012ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 16 கோடி , மேலும் அது தற்போது, 13.98 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை, 1992ல், 1.52 கோடியாக இருந்தது தற்போது, 5.14 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வெளிநாட்டு கலப்பினம் கிராமத்தில் வீட்டில் வைத்து பராமரிப்பது சுலபம் கிடையாது ....தமிழ் நாட்டில் இந்த நாட்டு மாடுகள் சரிவு மேலும் அதிகம் ....கிராமத்தில் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு மிக்க நாட்டு இன பசு மாடு கள் தான் வளர்க்க முடியும் ....நானும் வீட்டில் பசு மாடு எருமை மாடு வளர்த்த குடுமபத்தை சேர்ந்தவன் ...


கிஜன்
ஜன 15, 2025 11:57

ஹெச்.ராசா வளர்க்கும் மாடுகள் கலந்துகொண்டனவா ?


Mediagoons
ஜன 15, 2025 10:32

ஆண்களைப்போல பெண்களும் மாடுகளை அடக்க வேண்டாமா?


Svs Yaadum oore
ஜன 15, 2025 10:30

A1 பாலுக்கும் A2 பாலுக்கும் சத்து வேறுபாடு உண்டு என்று கால்நடை வல்லுநர்கள் கூறக் கேட்டதில்லையா? A1 பாலுக்கும் A2 பாலுக்கும் வித்தியாசமில்லை என்று சமீப காலத்தில் இது போன்ற கதைகள் பரப்பப்படுவது அதிகமாகி விட்டது. எதற்கு நாட்டு மாடுகள் தேவை?? நாட்டு மாடுகளில் தினமும் 2 முதல் 4 லிட்டர் அளவே பால் கிடைக்கும். அதனால் எண்ணிக்கை அதிகம் தேவை. நாட்டு மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் வெயில், மழையால் பாதிப்பு ஏற்படுவதில்லை. நாட்டு மாடுகளுக்கு விவசாயிகள் தீவனம் கொடுத்து வளர்ப்பதில்லை. செயற்கைக் கருவூட்டல் தேவையில்லை. கோவில் காளை என்று எதற்கு வைத்திருந்தார்களாம்? நாட்டு மாடுகளின் சாணம் சிறுநீர் சேகரித்து இயற்கை உரமாக்கினர். ஆனால் இப்பொது கலப்பினம் வந்த பிறகு நாட்டு மாடுகள் எண்ணிக்கை குறைந்து போனது ..விவசாயத்தில் பக்க பலமாக இருந்த நாட்டு மாடுகள் மேய்ச்சல் நிலமும் சுருங்கி போனது .....இயற்கையாக நடந்த விவசாயம் இப்பொது செயற்கை உரம், அதற்கு பூச்சி மருந்து என்று விவசாய நிலம் இப்பொது விஷமாகி இப்போது தெருவுக்கு தெரு Organic கடைகள் முளைத்துள்ளது .....இதை சொன்னால் A 1 பால் A 2 பால் என்று உளறிக்கிட்டு ...


ஆரூர் ரங்
ஜன 15, 2025 12:15

பால் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மாடுகளின் எண்ணிக்கை, சாணம் எப்படி குறையும்? மேய்ச்சல் நிலங்களை அழித்த பிறகு, மீதமுள்ள புல்வெளிகளில் போதுமான புல் கிடைப்பதில்லை. அதிலும் சுற்றியுள்ள நிலங்களிலிருந்து செயற்கை உரம் பூச்சிமருந்து எச்சங்கள். ஆனால் எக்காலத்திலும் 140 கோடி மக்களுக்கு இயற்கை விவசாயம் மூலம் உணவளிக்கவே முடியாது. (இலங்கை உதாரணம்) A2 பால் சத்து என்பது கற்பனை மட்டுமே. நிதர்சனமான நிலையை உணருங்கள். வாட்ஸ் ஆப் பேராசிரியர்களை நம்பாதீர். ( நான் மாடு வளர்த்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்.)


Svs Yaadum oore
ஜன 15, 2025 13:05

ராஷ்டிரிய கோகுல் மிஷன் RGM என்ற திட்டம் டிசம்பர் 2014 முதல் உள்நாட்டு மாடுகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.....எதுக்கு உள்நாட்டு மாடுகளின் மேம்பாடு திட்டம் மத்திய அரசு செயல்படுத்துது?? அது பற்றி இன்னும் வாட்ஸ் ஆப் பேராசிரியர்கள் எந்த செய்தியும் அனுப்பவில்லையா ??....


S Ramkumar
ஜன 15, 2025 09:50

காயம் அடைவோம், மரணம் சம்பவிக்கலாம் என்று தெரிந்தே இருப்பவர்களிடம் என்ன சொல்லுவது. மரணம் சம்பவிப்பது நம் கையில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். மரணிப்பது வீர மரணமாக இருக்கட்டுமே என்பது இவர்களின் கொள்கையாக இருக்கலாம். இதற்க்கு மேல் என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது.


Shekar
ஜன 15, 2025 09:29

இதில் வெற்றிபெற்றால் வாழ்க்கையில் IAS, IPS, NEET, போன்றவற்றில் வெற்றி பெற்றதுக்கு சமம் போல இளைஞர்களை பைத்தியமாக்காதீங்க


vbs manian
ஜன 15, 2025 09:02

பரிசுக்கு பின்னால் காத்திருக்கும் பயங்கரம்.


Kasimani Baskaran
ஜன 15, 2025 08:20

கழகத்தவர்கள் ஒருவரும் கலந்துகொள்ளவில்லை என்பது ஆச்சரியம் கலந்த ஏமாற்றம்.


Svs Yaadum oore
ஜன 15, 2025 07:42

ஜல்லிக்கட்டு என்பது நாட்டு மாடுகள் வளர்ப்பு சம்பந்தப்பட்டது.. தமிழ் நாட்டில் நாட்டு மாடுகள் இனம் வெகுவாக குறைந்துவிட்டது.. மாடுகள் இல்லாமல் விவசாயம் மனித வாழ்க்கை சாத்தியம் இல்லை .நாட்டு மாடுகள் இனம் உயிர்ப்பிக்க ஜல்லிக்கட்டு அவசியம் தேவை. இது போன்ற ஜல்லிக்கட்டு வேறு பெயர்களில் கர்நாடக ஆந்திராவிலும் உள்ளது ...இதை பாதுகாப்பாக நடத்த வேண்டும் ....மனித உயிருக்கு இங்கு மதிப்பில்லை ..ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடத்த அக்கறையில்லை ..அதுதான் ஜல்லிக்கட்டில் மரணம் பலர் படுகாயம் அடைய காரணம் ...


ஆரூர் ரங்
ஜன 15, 2025 09:34

சுத்தமான கலப்பற்ற நாட்டு மாடு என்பது கட்டுக்கதையாம்.. அந்தக் காலத்திலேயே கலப்பு ஏற்பட்டு விட்டது என ஜீன் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனவாம். மற்றபடி A1 பாலுக்கும் A2 பாலுக்கும் சத்து வேறுபாடு கிடையாது என்பதை கால்நடை வல்லுநர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். சமீப காலத்தில் இது போன்ற கதைகள் பரப்பப்படுவது அதிகமாகி விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை