உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ கழிவு மேலாண்மை; மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

மருத்துவ கழிவு மேலாண்மை; மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: மருத்துவ கழிவு மேலாண்மை தொடர்பாக, பொது மக்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.சென்னையை அடுத்த திருநீர்மலையில் உள்ள ஏரிக்கரையில், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக, நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் வழக்கு பதிந்து, தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், தீர்ப்பாயத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துஉள்ள அறிக்கை:குழந்தைகள், பெரியவர்களுக்கான, 'டயப்பர், சானிட்டரி நாப்கின்'கள் உள்ளிட்ட உயிரி மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற, கழிவு மேலாண்மை விதிகளின்படி, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.அபாயகரமான மருத்துவ கழிவுகளை தனியாக சேகரித்து அகற்றவும், வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதை வாரியம் கண்காணிக்கிறது. மருத்துவ கழிவு மேலாண்மை தொடர்பாக, பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வாரியம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு செய்திகளை, தமிழ், ஆங்கிலத்தில் வாரியம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. வாரியத்தின் வாயிலாக மாவட்ட அளவில், ஓராண்டில், 234 பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன.மருத்துவ கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு, பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ கழிவுகள் பொது வெளியில், நீர்நிலைகளில் கொட்டப்படுவதை தடுக்க, அவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜன 25, 2025 08:04

கேரளாக்காரனுக்கு எடுக்க வேண்டிய பாடத்தை தமிழனுக்கு எடுப்பது மகா வன்மம்.


Varadarajan Nagarajan
ஜன 25, 2025 08:03

மருத்துவ கழிவுகள் உள்பட அனைத்து கழிவுகளையும் கழிவுநீரை ஆறுகளில் கலக்கவிடுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் போன்ற அரசு அமைப்புகள்தான். கழிவுகளை முறையாக கையாள்வதில்லை. அவர்களிடம் அதற்குண்டான கட்டமைப்பும் இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவற்றை கண்டுகொள்வதில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டும் தேவைக்கு அதிகமாக கடுமை காட்டுவதுபோல் நடந்துகொண்டு இதர வருமானம் பார்க்கின்றது. கட்டணம் வசூலிப்பதுமட்டுமே இந்த வாரியத்தின் பணியா? இவர்களால் திருப்பூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டதை தடுக்கமுடிந்ததா? அல்லது நெடுநாட்களாக கேரளாவிலிருந்து இதுபோன்ற மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் இருந்தபோது தடுக்க நடவடிக்கை எடுத்தார்களா? இந்த பிரச்சனையை ஒரு அரசியல் கட்சி கையிலெடுத்தபிறகு ஆணையம் முதல், வாரியம் வரை அனைத்து அமைப்புகளும் செயல்படுவதாக காட்டிக்கொள்கின்றன


Raj
ஜன 25, 2025 07:09

இந்த விழிப்புணர்வு பள்ளி, கல்லூரிகளுக்கு தேவை இல்லை மருத்துவ மனைகளுக்கு தான். வெட்டித்தனமான வேலை. உக்காந்து யோசிப்பாங்களோ.


Gajageswari
ஜன 25, 2025 07:05

கழிவு ஏற்படாமல் இருக்க பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதாவது சேமிப்பு அவசியம் என்பதை உணர்த்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை