உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊராட்சி குப்பை வண்டிகளில் விழிப்புணர்வு பாடல் ஒலிபரப்பு

ஊராட்சி குப்பை வண்டிகளில் விழிப்புணர்வு பாடல் ஒலிபரப்பு

சென்னை: ஊராட்சிகளில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களில், திடக்கழிவு விழிப்புணர்வு பாடல் ஒலிபரப்பப்பட உள்ளது.துாய்மை பாரத இயக்கத்தை, தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்த, ஊராட்சிகளில் வீடு, வீடாக சென்று, பேட்டரியால் இயங்கும் வாகனங்களில், குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபரத்தை மக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவை அவரவர் வீடுகளிலேயே மட்கும், மட்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்த வலியுறுத்தவும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களில், விழிப்புணர்வு பாடல் ஒலிபரப்பப்பட உள்ளது.இப்பாடலை, வாகனங்களில் ஒலிபரப்பும் பணியை, தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார். ஊராட்சிகளில், 1.25 கோடி ஊரக குடியிருப்புகளில், 84,651 பணியாளர்கள் குப்பை சேகரித்து வருகின்றனர். இதற்காக, 8,315 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், 1,291 டிராக்டர்கள், 372 பிற வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பாடல், 12,525 ஊராட்சிகளிலும் ஒலிபரப்பப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி