உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  விழிப்புணர்வு வீடியோ உணவுத்துறை வெளியீடு

 விழிப்புணர்வு வீடியோ உணவுத்துறை வெளியீடு

சென்னை: 'ஆன்லைன்' வணிகத்தில் பொருட்கள் வாங்கி, பாதிக்கப்பட்டோர் புகார் அளிப்பது உட்பட, 10 விழிப்புணர்வு வீடியோக்களை, தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நுகர்வோருக்கு, நியாயமான விலையில், தரமான பொருட்கள், சரியான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், வணிக சுரண்டுதலில் இருந்து பாதுகாக்கும் பணிகளை, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மேற்கொள்கிறது. இது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், 'ஆன்லைன்' வணிகத்தில் பொருட்கள் வாங்கி, பாதிக்கப்பட்டோர் புகார் அளிப்பது, புகாரை இணையதளம் வாயிலாக பதிவு செய்வது உள்ளிட்டவை தொடர்பாக, 10 வீடியோக்கள், 'www.tnpds.gov.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்படும் நுகர்வோர், 044 -28592828 என்ற தொலைபேசி எண் மற்றும், 'tn.gov.in' இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ