உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சைக்கிள் பயணத்தில் குஜராத் தொழிலதிபர்கள்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சைக்கிள் பயணத்தில் குஜராத் தொழிலதிபர்கள்

திருப்புவனம்:அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன. 22 ல் நடைபெற உள்ளதையடுத்து குஜராத் தொழிலதிபர்கள் சைக்கிளில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்து தரிசனம் செய்துள்ளனர்.தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். தக்ஷின் பாரத் சங்கம் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் இவர்கள் ஆண்டுதோறும் பத்து நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்தாண்டு மும்பையில் இருந்து குஜராத் வரை 900 கி.மீ., பயணம் மேற் கொண்டனர். இந்தாண்டு அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி ராமேஸ்வரம் ராமர் பாதத்தை வழிபட திட்டமிட்டு கடந்த ஏழாம் தேதி சென்னையில் சைக்கிளில் கிளம்பியுள்ளனர்.ஒரு வாரம் 750 கி.மீ., பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட இவர்கள் தினசரி 100 முதல் 140 கி.மீ., வரை 25 கி.மீ வேகத்தில் சைக்கிளில் செல்கின்றனர்.பயணம் புறப்பட்ட ஆறாவது நாளான நேற்று காலை ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்த உடன் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க நான்கு வழிச்சாலை வழியாக மதுரை செல்லும் வழியில் திருப்புவனம் வந்தனர். மனோஜ் படேல் கூறியதாவது: பத்து நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த எட்டு பேர் பயணம் மேற் கொண் டுள்ளோம், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே ராமேஸ்வரத்தில் அவர் காலடி பதித்த ராமர் பாதத்தை தரிசனம் செய்ய திட்டமிட்டு கிளம்பினோம், நேற்று (ஜன. 13) மாலை மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ததுடன் பயணம் நிறைவு பெற்றது. ராமர் பிறந்த இடமான அயோத்தியில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுவது மிகவும் பெருமையான விஷயம். சைக்கிள் பயணம் உடல் ஆரோக்யத்தை தர வல்லது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை