உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிதம்பரம் கோவில் நிலம் மீட்க கடலுார் கலெக்டருக்கு கெடு

சிதம்பரம் கோவில் நிலம் மீட்க கடலுார் கலெக்டருக்கு கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் நிலங்களை மீட்க, கடலுார் மற்றும் காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:சிதம்பரம் நடராஜர் கோவிலை, பொது தீட்சிதர் சபா நிர்வகிக்கிறது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலுார், சேலம், திருநெல்வேலி, புதுச்சேரியில் உள்ள காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், இந்த கோவிலுக்கு சொந்தமாக, 3,000 ஏக்கருக்கு மேலான நிலம் உள்ளது.மோசமான நிர்வாகத்தால், கோவில் சொத்துக்கள் விரையமாகி விட்டன. கோவில் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, கடலுார் கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மருதாச்சலமூர்த்தி ஆஜரானார். கடலுார் மற்றும் காரைக்கால் கலெக்டர்கள், விழுப்புரத்தில் உள்ள அறநிலையத் துறை இணை ஆணையர் உரிய விசாரணை நடத்தி, கோவில் சொத்துக்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், 12 வாரங்களில் இந்த நடவடிக்கைகளை முடிக்கும்படியும், நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
அக் 06, 2024 09:43

சிதம்பரம் நடராஜர் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து இருப்பது திருட்டு கழக பயல்கள்.. தங்களின் தொண்ட குண்டர்களை திராவிட அரசு எப்படி தண்டிக்கும்? நடக்காத காரியம்


தத்வமசி
அக் 06, 2024 08:03

உயர்நீதி மன்ற கட்டிடமே ஒரு சிவன் கோவில் இடம் தான், சென்னையில் பல கல்லூரிகள், பொழுது போக்கு இடங்கள், வணிக வளாகங்கள் எல்லாம் கோவில் நிலங்களில் தான் கட்டப்பட்டுள்ளன என்பது நிதர்சனம். பல ஆயிரம் கோவில்களை காணவில்லை, பல ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் காணவில்லை. இது எந்த வகை நிர்வாகம் ?


pandit
அக் 06, 2024 06:51

கபாலி கோவிலுக்கு சொந்தமான லயோலா நிலம் மீட்பு எப்போது


rama adhavan
அக் 06, 2024 06:48

இந்த மனுவில் உள்நோக்கம் உள்ளது போல் தெரிகிறது. மனுதாரர் யார் என்பது குறித்து விசாரணை தேவை. விபரமும் தேவை. இந்த மனுவை நீதிமன்றம் எந்த அடிப்படையில் விசாரணைக்கு எடுத்தது? மனுதாரருக்கு கோவில் விஷயத்தில் என்ன அக்கறை?


Dharmavaan
அக் 06, 2024 08:27

எந்த ஹிந்துவும் இதை எடுக்கலாம் மதத்தின் மீது அக்கறை போதும்


Dharmavaan
அக் 06, 2024 08:28

உனக்கு என் உறுத்துகிறது நீயும் கோயில் நிலத்தை ஆட் டாய் போட்ட ஆளா


V Venkatachalam
அக் 06, 2024 11:58

கோயில் சம்பந்தமான விஷயங்களை கேட்பதற்கு ஒரு இந்துவாக இருந்தால் மட்டுமே போதும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை