உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு: போலீசுக்கு ஐகோர்ட் கண்டனம்!

சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு: போலீசுக்கு ஐகோர்ட் கண்டனம்!

சென்னை: நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட் , போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தது.நில மோசடி தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jxbbq99f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில் அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, சவுக்கு சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரர் எப்.ஐ.ஆர்., ரத்து செய்யப்பட வேண்டும் எனக்கோரவில்லை. ஜாமின் மட்டுமே கேட்கிறார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது எப்படி என புரிந்து கொள்ள முடியவில்லை. கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க ஏன் மறுத்தது என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. சில கருத்துகளை தெரிவித்ததற்காக, சிலர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவதை பார்க்கிறோம். போலீசார் தீய நோக்கத்துடன் முன்கூட்டியே செயல்படுவதை தடுக்க முடியாத சூழலில், நிலைமை படுமோசமாவதற்கு முன்னர் நீதித்துறை மாஜிஸ்திரேட் மற்றும் செசன்ஸ் நீதிமன்றங்களும் தலையிட்டு தடுக்கலாம். அதற்கு எளிதாக, ரிமாண்ட் செய்ய மறுக்கலாம். மனுதாரர், ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தால் அதனை வழங்கலாம்.சில கருத்துகளை சொன்னார் என்பதற்காக ஒருவர் மீது வழக்குப் போடுவது என்பது, சர்வாதிகார அணுகுமுறையின் அறிகுறி. யார் மீது வேண்டுமானாலும் வாய்மொழி விமர்சனம் இருக்கலாம். இதில் விசாரணை என்பது ஒரு புறம். கைது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது. தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டால் மட்டுமே போலீசார் தலையிட வேண்டும். மற்ற நேரங்களில் தேவையில்லை. இந்த வழக்கில் மனுதாரர் இம்சிக்கப்பட்டு உள்ளார். அவர் இரண்டு முறை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார். சுப்ரீம் கோர்ட் அவருக்கு உதவ முன்வரும் போது, மாநில அரசு அடுத்தடுத்து வழக்குகளை தொடுத்து அதனை தடுத்து வருகிறது. இத்தகைய அணுகுமுறை சட்டத்தின் ஆட்சியை மதிக்காததை காட்டுகிறது. மனுதாரர் சிறிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டு உள்ளது துரதிர்ஷ்டவசமானது. போலீசாரின் தீய நோக்கம் அனைத்து இடங்களிலும் தெரிகிறது. அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மனுதாரரை( சவுக்கு சங்கர்) ரூ.10 ஆயிரம் சொந்த பிணையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செலுத்தி ஜாமினில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Ponnusamy Chinnamani
ஜன 20, 2025 23:42

மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஏழைகளுக்கு நீதி வழங்கினாலும் த்.வீ.வ.வா.அதிகாரகள் சுமார் இருபது வருடங்களாக நீதி மன்ற உத்தரவு களை தூக்கி எறிந்து பல வழக்குகள் விசாரணையில் பல் வேறு பொய்யான ஆவணங்களை வழங்கி குற்றவாளி அதிகாரிகள் காப்பாற்ற பட்டு வரும் நிலையில் பொது மக்களுக்கு நீதி மன்ற உத்தரவை நியாயமான முறையில் செயல் படுத்து வது கிடையாது.அரசு வழக்கறிஞர் மூலம் பொய்கள் ஏற்றுக்கொள்ள படுவதால் த்.வீ.வ.வாரிய அதிகாரிகள் சுமார் இருபது வருடங்களாக நீதி மன்ற உத்தரவு களை கொச்சை படுத்தி பதவி உயர்வு பெற்று ஆனந்த மாக பணி செய்து வரும் நாடுதான் நம் தமிழ் நாடு.


GoK
ஜன 20, 2025 07:22

இந்த திமுக குடும்ப அரசு நீக்கப்பட வேண்டியது காலத்தின் கட்ட்டாயம். ஊழலின் உச்சத்தை தொட்டு ஆணவத்தில் இருக்கிறார்கள். சாதி இன மொழி வேறுபாடுகளை உருவாக்கி மிகைப்படுத்தி ஆட்சியை கைப்பற்றி ஒரு குடும்பம் மாநிலத்தையே பாழ் செய்துள்ளது.அதற்க்கு உண்டான தண்டனை கிட்டியே தீரும்.


Minimole P C
ஜன 22, 2025 07:52

well said.


Paulpandian s
ஜன 19, 2025 20:17

இது போன்ற நீதிமான்களுக்கு நான் தலைவணங்குகிறேன்


Sivanandan
ஜன 19, 2025 10:57

இப்படி சட்டத்தை உதாசீனம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு தண்டனை என்பதே கிடையாதா


Murugesan.P
ஜன 18, 2025 21:58

பாராட்டப்பட வேண்டிய விஷயம்


Bala
ஜன 18, 2025 18:43

எல்லோருக்கும் பொருந்தும். குறிப்பாக பார்த்தால் சொன்னவர் தன் தலைவிதி என நொந்து கொள்ள வேண்டும் .


rasaa
ஜன 18, 2025 18:08

கீழமை நீதிமன்றங்கள் ஆட்சி, கட்சி கட்டுப்பாட்டில் உள்ளவை. அவர்கள் நியமனங்கள் ஆட்சியாளர்களால் உருவாக்கப்படுபவை. ஆகவே அவர்களின் கண் அசைவிற்கு ஏற்றாற்போல் நடந்துதான் ஆகவேண்டும். நீதி, நேர்மை எல்லாம் மேலே உள்ளவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று நடப்பவர்கள். அவர்களை குறை சொல்லமுடியாது.


sabthamohan M
ஜன 18, 2025 10:02

திருமிகு.GRS அவர்கள் நீதிபதி இல்லை. நீதிதேவன்.இன்னும் இருக்கும் நம்பிக்கைக்கு இதுபோன்ற காவல்தெய்வங்கள் காரணம்.


ramani
ஜன 18, 2025 09:18

அரசுக்கும் சரி காவல்துறைக்கும் சரி எவ்வளவு தடவை நீதிமன்றம் குட்டினாலும் உரைப்பதில்லை. தங்களை திருத்திக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இதற்கு நீதிமன்றம் வெறுமனே குட்டுவது மட்டும் போதாது.


A Veeramani
ஜன 18, 2025 07:53

நீதியரசர் சாமிநாதன் கீழமை நீதிமன்றங்களின் அனுகுமுறையை மயில் இறக்கினால் வருடியிருக்கிறார். அது போதாது. சட்டம்தெரியாமலோ வேறு காரணங்களுக்காகவோ ஜாமீன் மறுக்கபட்டிருந்தாலும் அதுவும் குற்றமே. அதற்கு என்ன தண்டனை? நீதிமன்றங்கள் சரியாக செயல்பட்டால், இதுபோன்ற அப்பட்ட சட்டமீறல்கள் இருக்காது. இதற்கு ஒரே வழி நஷ்ட ஈடு வழங்கி அதை போலீஸ் மற்றும் கீழமை நீதிபதிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்.