உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்கலை, கல்லுாரிகளில் பிளாஸ்டிக்கிற்கு தடை

பல்கலை, கல்லுாரிகளில் பிளாஸ்டிக்கிற்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'பல்கலை மற்றும் கல்லுாரிகளில், ஒரு முறைபயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதுடன், மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பல்கலை கழக மானிய குழு எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக, அனைத்து உயர்கல்வி நிறுவனங் களுக்கும், பல்கலை மானிய குழுவின் செயலர் மணிஷ் ஜோஷி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்வி மைய வளாகங்களில், பிளாஸ்டிக் பொருட்கள்பயன்பாடு குறித்த வழிகாட்டுநெறிமுறைகள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.அதன்படி பல்கலை மற்றும்கல்லுாரிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். அதன் தீமைகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வளாகமாக மாற்ற வேண்டும்.கல்வியகங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் விடுதிகளில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக, குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். பாலிதீன் பைகளுக்கு பதில், துணி, காதி பைகளை பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதுடன், அந்த தடையை மீறினால் உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ms Mahadevan Mahadevan
நவ 08, 2024 06:20

எங்கு பார்த்தாலும் இந்த கேரி பைகளைன் குப்பை குவியல்கள் தான் . இதன் உற்பத்திக்கு தடை விதிக்க விட்டால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படும்


Kasimani Baskaran
நவ 08, 2024 05:53

அப்படியே கூவம் நதி எப்படி திராவிட சாதனையில் சாக்கடையானது என்பதையும் சொல்லிக்கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை