உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட் மதுரை கிளையில், ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில் ' அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன்' என்றார்.இதிலிருந்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்டு சில மனுக்களை அனுமதித்தும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் ஒரு மனுவை பைசல் செய்தும் உத்தரவிட்டார். இந்த சட்டப் பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கு 3வதாக நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

M senthilkumar
அக் 10, 2025 22:31

நீதிபதியின் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. உலகில் உள்ள மனிதர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். இல்லை என்றால் கடவுளின் சாபத்திற்கு ஆளாக வேண்டும்.


Makkal Manam
அக் 10, 2025 21:44

முருகா போற்றி. வாழ்க நின் புகழ்


G Mahalingam
அக் 10, 2025 21:04

திக திமுக ஒழிய வேண்டும். கடவுள் பக்தி இல்லாதவர்கள் தேவை இல்லாமல் உள்ளே நுழைவது அயோக்கியத்தனம்


sankaranarayanan
அக் 10, 2025 21:00

திராவிட மாடல் அரசுக்கு ஒரு நெத்தி அடி... இனி இந்துக்களை அவமானப்படுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறோம் சத்தியம் ஜெயிக்கும் நிலை நாட்டும்.


ஜெகதீசன்
அக் 10, 2025 20:07

அரசு தான் மேல் முறையீடு செய்யுமே!


Nanchilguru
அக் 10, 2025 20:04

எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் போக சொல்கிறது இந்த ஆட்சி


Santhakumar Srinivasalu
அக் 10, 2025 19:54

மலையில் பாரம்பரியத்தை மீறி தேவை இல்லாத பிரச்சனைகளை உண்டாக்க முஸ்லிம் நிர்வாகிகள் செய்வது அங்கு அமைதி மட்டுமில்லாமல் இரு சமூகத்திடம் சங்கடத்தை உண்டாக்கும் என்பதை உணரவேண்டும்!


தமிழ்வேள்
அக் 10, 2025 19:53

பாலைவன வாழ்க்கை முறையை மற்ற தர்ம நம்பிக்கையாளர்கள், அனுஷ்டானம் செய்வோர் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சிகளுக்கு நீதிமன்றம் ஆப்பு வைத்தது சரியான ஒன்று..


Balaji Radhakrishnan
அக் 10, 2025 19:29

சபாஷ், நீதிபதி அவர்களே உங்களுடைய நடு நிலையான தீர்ப்பை வரவேற்கிறேன்.


kumar c
அக் 10, 2025 19:06

கடவுளுக்கே தான் கடவுள்தான்னு நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை . கடவுள் தன்னை காப்பாரா இல்லை தன் பக்தனை காப்பாரா ? இந்து கடவுள் இல்லைனு நிரூபித்தால் பிற வோட்டு கிடைக்கும் .இருக்கிறார் எனில் யாருக்கும் லாபமில்லை . இந்த சூழ்நிலை கடவுள் கொடுப்பதா இல்லை அவரே தேடி கொண்டதா ? இனி எல்லாம் நேராக டெல்லி போய் விட வேண்டியதுதான் . இப்படியே போனால் நல்லவர்கள் வெளியே நடமாட முடியாது . கடவுள் தனக்கு என புது தேசத்தை தேட வேண்டியதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை