உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதி அவசியம் தமிழக முதல்வருக்கு பாலகுருசாமி கடிதம்

 கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதி அவசியம் தமிழக முதல்வருக்கு பாலகுருசாமி கடிதம்

சென்னை: 'கல்வி நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்பி, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி, ஏ.ஐ., போன்ற புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'அனைத்து உயர் கல்வி பாடத்திட்டங்களிலும் செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கென ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர்' என கூறப்பட்டுள்ளது. இது, வளர்ச்சிக்கான சிந்தனை என்றாலும், தற்போதுள்ள சூழலில், அதன் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து கேள்விகள் எழுகின்றன. பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பல பல்கலைகளில், துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இத்தகைய அடிப்படை பிரச்னைகளை தீர்க்காமல், உடனடி ஏ.ஐ., கல்வி எனும் வாக்குறுதி, ஓட்டுகளை ஈர்க்கவா? கல்வி என்பது அரசியல் கருவி அல்ல; அது தலைமுறைகளை வடிவமைக்கும் பொறுப்பான துறை. எனவே, ஆசிரியர் பணியிடங்கள், துணை வேந்தர் பதவிகளை விரைவாக நிரப்ப வேண்டும். கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஏ.ஐ., போன்ற புதிய பாடங்களை படிப்படியாக திட்டமிட்ட முறையில் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஏப் 11, 2026 05:52

எதுக்கோ அடிப்போடுகிறார். ஏன் பாலகுருசாமி பதவியில் இருந்த பொழுதெல்லாம் இதெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா?.அவரே காபாந்து முதல்வர். அதுவும் இன்னும் சில மாதங்களுக்கு, அதாவது அடுத்த அமைச்சரவை பதவி ஏற்கும் வரை. அவரிடம் கோரிக்கை வைத்து அவர் அப்படியே அறுத்துத் தள்ளி விடுவாராக்கும்.


Vaithi
ஏப் 11, 2026 05:38

முதலில் ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய 2,000 கோடியை வாங்கி கொடுத்துவிட்டு பேசுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை