பி.எட்., வகுப்புகள் வரும் 20ல் துவக்கம்
சென்னை:பி.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு வகுப்புகள், வரும் 20ம் தேதி துவங்க உள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இதில், 2,040 பி.எட்., இடங்கள் உள்ளன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20 முதல், ஜூலை 21 வரை நடந்தது. தர வரிசை பட்டியல், கடந்த மாதம் 31ம் தேதி வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் கடந்த 9ம் தேதி முடிந்தது. பி.எட்., முதலாம் ஆண்டு வகுப்புகள், வரும் 20ம் தேதி துவங்கும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்து உள்ளது.