உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவில் வளாகத்தில் மாட்டிறைச்சி கழிவுகள்: பக்தர்கள் கொந்தளிப்பு

 கோவில் வளாகத்தில் மாட்டிறைச்சி கழிவுகள்: பக்தர்கள் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில் வளாகத்தில், மனதை புண்படுத்தும்படி மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டப்படுவது, பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடும், அதை உண்ண வரும் நாய்களால் பக்தர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாசீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றாகும். இங்கு உள்ள வாசீஸ்வரர், சுயம்பு லிங்கமாக எழுந்தருளி, சதுர பீடத்தில் அருள்பாலிக்கும் வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில், 4 ஏக்கர் பரப்பளவில் கம்பீரமாக அமைந்துள்ளது.வேதங்களை திருடியதாக கருதப்படும் அசுரர்களை கொன்றதன் மூலம் தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க, மகாவிஷ்ணு இந்த கோவிலில் சிவபெருமானை வழிபட்டதாகவும், அதனால், 'பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரர்' என்ற பெயரும் உள்ளது. தினமும் திரளானோர் வந்து, வழிபட்டு செல்கின்றனர்.இந்நிலையில், கோவில் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதியில், மர்ம நபர்கள் தொடர்ச்சியாக மாட்டிறைச்சி கழிவுகளையும், எலும்பு துண்டுகளையும் கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள், அந்த இறைச்சி கழிவுகளையும், எலும்புகளையும் கவ்விக்கொண்டு, கோவில் வளாகத்திற்குள்ளேயே எடுத்து வந்து சாப்பிடுகின்றன.இதனால், புனிதமான கோவில் வளாகம் அசுத்தமாவதோடு, இறைவனை தரிசிக்க வரும் பக்தர்கள் அருவருப்பும், மனவேதனையும் அடைகின்றனர். நாய்களால் பக்தர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. கோவிலின் தெய்வீகத் தன்மையும், அமைதியும் சீர்குலைவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுமட்டுமின்றி, இக்கோவிலுக்குச் சொந்தமான 2.15 ஏக்கர் நிலம், கோவிலில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ளது. பயன்பாடின்றி இருக்கும் இந்நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், அப்பகுதியில் மாட்டிறைச்சி தொழில் செய்து வரும் சிலர், எஞ்சிய கழிவுகளை கோவில் நிலத்தின் சுற்றுச்சுவருக்குள்ளேயே வீசி செல்கின்றனர். இதனால் அந்த இடம் முழுதும் துர்நாற்றம் வீசி, கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சிவபக்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் திட்டமிட்ட செயல்

சிவ பக்தர்கள் கூறியதாவது: கோவிலுக்கு அருகே பயன்பாடற்ற காட்டுப்பகுதி உள்ளது. கழிவுகளை அகற்ற விரும்புவோர், அங்கு சென்று முறைப்படி அகற்றலாம். அதைவிட்டு, கோவில் சுற்றுச்சுவர் அருகில் கொட்டுவது, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் திட்டமிட்ட செயலாகவே உள்ளது. கோவிலுக்கு இரு புறங்களிலும் சர்ச்கள் உள்ளன. ஆனால், அங்கு இதுபோன்ற செயல்களில் எவரும் ஈடுபடுவதில்லை. கோவிலை மட்டும் குறிவைப்பது ஏன்? எனவே, புனித தலத்தின் துாய்மையை பாதுகாக்கவும், பக்தர்களின் மனக் குமுறலுக்கு தீர்வு காணவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

KayD
ஜூலை 27, 2026 19:55

டேவிட் நெல்லை பக்கம் சேர்ந்தவர்.. கூட்டத்தில் கும்மி அடிக்க பார்க்கிறார், நான் கிறிஸ்தவன் தான் இவர் சொல்லும் கிறிஸ்தவ கடைகள் எல்லாம் முக்கால்வாசி வியாபாரிகள் அண்ணாச்சி வகையாறாக்கள் தான் .. அவுங்க ஆளுங்க கிட வாங்க சொல்லி கேப் ல வியாபார சைக்கிள் ஓட்டுகிறார். யார் அந்த கோவில் புனிதத்தை கெடுத்தார்கள் என்று தெரியும் முன் தீர்ப்பு எழுத கூடாது. நீங்க வெறும் டேவிட் மட்டும் தான் பைபிள் ல வர கிங் டேவிட் இல்லை..


Iyer
ஜூலை 27, 2026 19:01

இனியாவது ஹிந்துக்களாகிய நாம் விழித்துக்கொள்ளவேண்டும். பீகார், வங்காளம், UP., மாநிலங்களைப்போல் சனாதன விரோத கட்சிகளை வீட்டுக்கு அனுப்பவேண்டும். இந்தியா அரசியலமைப்பை திருத்தி ஹிந்துக்கள் மற்றும் அதைசார்ந்த மதத்தினருக்கு மட்டும் தான் ஓட்டுரிமை என்று சட்டம் கொண்டுவரவேண்டும்.


D Natarajan
ஜூலை 27, 2026 14:26

கொட்டியவனின் கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார என்றால் அந்த கடவுள் ?


எஸ் எஸ்
ஜூலை 27, 2026 13:35

பிற மத வழிபாட்டு தலங்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. திருப்பாசூர் சர்ச் சுவரை ஒட்டி யாராவது இந்த கழிவுகளை கொட்டி இருந்தால் இந்நேரம் கொட்டியவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பார்கள். டிவி களில் விவாதம் அனல் பறக்கும். அகில இந்திய அளவில் திருப்பாசூர் பிரபலம் ஆகும்


Saran
ஜூலை 27, 2026 13:18

it is better you send this photo to the police Dept instead of putting it on the net. As you know very well, this news may provoke the violence in the society.


Murugan Gurusamy
ஜூலை 27, 2026 12:38

நான் அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற வந்தேன் முதல் முறையாக, கோவிலுக்கு அருகாமையில் மாட்டு கறி பிரியாணி கடை நிறைய இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்,,, தமிழ் இந்துக்கள் சரி இல்லை என்பது வேதனையான விடயம்.


அப்பாவி
ஜூலை 27, 2026 09:57

கோவில் வளாகம் இவ்ளோ புதர் மண்டி இருக்கே.. பக்தர்கள் கவனிக்கலியா? கழிவு கொட்டுன உடனே இப்படி பொங்குறிங்க?


தமிழன்
ஜூலை 27, 2026 09:36

உன் பெயரே டேவிட் . மதம் மாறினவன்னு சொல்றாங்களே உண்மையா


Haja Kuthubdeen
ஜூலை 27, 2026 10:37

சும்மா டைம்பாசுக்கு மாறியிருக்கலாம்.


Tamilan
ஜூலை 27, 2026 08:23

காட்டெருமைகள் கையில் தமிழர்கள் அரசு சிக்கித்தவிக்கும்போது மாட்டிறைச்சி கோவிலில் இருப்பதெல்லாம் ஒரு பிரச்சினையா?


விருமாண்டி, Benaras
ஜூலை 27, 2026 08:21

கருநாகம் ஹிந்து என்றால் திருடன் என்று ஆணவத்துடன் சொன்னான். 2G ராசா ஹிந்துக்கள் அனைவரும் vesi மகன் என்று சொன்னார். தமிழ்நாட்டு ஹிந்துக்கள் சோற்று பிண்டங்கள். இதுவும் கருநாகம் சொன்னது


SUBBU,MADURAI
ஜூலை 27, 2026 08:57

விருமாண்டி நான் கூட உன்னை இந்து விரோதி என்று தவறாக கணித்து விட்டேன்.


Haja Kuthubdeen
ஜூலை 27, 2026 10:43

சுப்பு அண்ணா..வழிபாட்டு தலத்தை பராமரிக்காமல் கவனிக்காமல் இவ்வளவு அலட்சிமா வைத்துள்ளார்களே அதையும் கண்டியுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை