உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்துக்கு நடந்த துரோகம்; மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழகத்துக்கு நடந்த துரோகம்; மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' 2026ம் ஆண்டு வரும் தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழக மக்கள் நல்லாட்சி கேட்கிறார்கள்,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, இபிஎஸ் அருகருகே அமர்ந்து இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4s3422s1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சந்தர்ப்பம்

பின்னர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: எளிமையும், நேர்மையும், தேசியமும் கலந்த ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்தவர் மூப்பனார். அவருக்கு நாடு அளவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆளுமைமிக்க மூப்பனார் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில், பிரதமராக வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியது. பிரதமராக வேண்டிய நிலையில் ஆதரவு தராமல் அதனை தடுத்தனர். அந்த சக்தி யார் என்று நமக்கு தெரியும்.

துரோகம்

தமிழ், தமிழ் கலாசாரம் என்று திரும்ப திரும்ப பேசுபவர்கள் தமிழர் பிரதமர் ஆக வேண்டிய அந்த தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்தனர். இதையும் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும். இதனை மறக்கவும் முடியாது. ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழத்திற்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன். அரசியல் இங்கே பேச கூடாது. இங்க புகழஞ்சலி செலுத்த வந்து இருக்கிறோம்.

நல்லாட்சி

ஒரு சின்ன அரசியல் பேசுகிறேன் என்று தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். தமிழகத்தில் அந்த மாதிரி, அவரது கொள்கைக்கு ஏற்ற மாதிரி, நல்லாட்சி அமைய நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டிய தருணம் இது. 2026ம் ஆண்டு வரும் தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனை பூர்த்தி செய்ய கூடிய சக்தி நாம் எல்லோரிடமும் இருக்கிறது. தமிழக மக்கள் நல்லாட்சி கேட்கிறார்கள்.

நமது கடமை

போதைப்பொருள் வேண்டாம். சாராயம் தண்ணீரை விட கேடு கெட்ட நிலையில் பரவுகிறது. மக்கள் எல்லோருக்கும் தொண்டு செய்வது நமது கடமை. இந்த கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும். இந்த கூட்டணியின் மூலம் மக்களுக்கு நாம் தொண்டு ஆற்ற வேண்டும். இதில் சின்ன சின்ன உட்பூசல் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். முதிர்ச்சி அடைந்த, பக்குவமான தலைவர்கள் இருக்கிறார்கள். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து நல்லாட்சி அமைய உழைக்க வேண்டும். இதுவே மக்கள் தலைவர் மூப்பனாருக்கு நாம் அளிக்கும் பெரும் அஞ்சலி. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

K.n. Dhasarathan
ஆக 30, 2025 22:17

துரோகத்தை பற்றி யார் பேசுவது ? சொந்த மாநிலத்தை பற்றி சிறிதும் கவலை படாமல், பதவி ஒன்றே குறி என்று காலம் கடத்தும் நிதி அமைச்சரா ? தமிழனாக இருந்தாலும் கண் மூடிக்கொண்டு ஆதரிப்பது இங்கு நடக்காது நாட்டுக்கு நல்லது எதுவோ அதுதான் நடக்கும், அப்படி பார்த்தால் வாஜ்பாயி அரசை கவிழ்ழ்த்தது யார் ? அது துரோகமா? தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை தராமல் பொய்கதைகள் பல பல புனைந்து பிள்ளைகள் படிப்பை கெடுக்கும் துரோகி யார் ? சட்டப்படி செல்லாது என்று தெரிந்தும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது யார் ? தமிழ் நாட்டில் தேர்தலில் நின்றாள் டெபாசிட் கூட கிடைக்காது என்று அஞ்சி வாடா நாடுகளின் தயவில் ஆட்சியில் அமர்ந்து இன்னும் துரோகம் செய்வது யார் ? இங்கு தேர்தலில் நிற்க தெம்பு, திராணி, தைரியம் உண்டா ? எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் .


Thravisham
ஆக 31, 2025 05:22

தமிழகத்தின் துரோகம் கருணாநிதியே m


Sivagiri
ஆக 30, 2025 22:06

காலைல எழுந்திருச்சு பழைய பேப்பர்லாம் படிப்பாங்க போல . . .


Venugopal S
ஆக 30, 2025 20:43

மூப்பனாரை தமிழக மக்கள் மறந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டது!


sankar
ஆக 30, 2025 18:29

மூப்பனாரின் கொள்கை எனக்கு தெரிஞ்சு காங்கிரஷ்காரரின் கொள்கை விசுவாசம்


V RAMASWAMY
ஆக 30, 2025 18:01

Very decent and laudable speech.


Tamilan
ஆக 30, 2025 17:37

மூப்பனாரின் பிள்ளை GK வாசன்தான் NDA வின் முதல்வர் வேட்பாளரா ?


T.sthivinayagam
ஆக 30, 2025 15:22

குடியரசு துணை தலைவர் வேட்பாளர் ரெட்டியை ஆந்திரா முதல்வர் ஆதரிக்காவிட்டால் அவரை நீங்கள் ஒரு தெலுங்கரா என்று ஓசி வடைகள் பேசுவார்கள் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள் உண்மையா


Abdul Rahim
ஆக 30, 2025 14:45

அச்சச்சோ மூப்பனார் மேல என்ன ஒரு பாசம்....


Anand
ஆக 30, 2025 15:35

மூப்பனார் மேலே அவர் பாசம் வைக்காமல் பிறகு யார் கேடுகெட்ட மூர்க்கனா வைப்பான்?


அப்பாவி
ஆக 30, 2025 14:31

ராஜ ராஜ சோழன் காலத்தில் ஓலைச் சுவடிகளை பூட்டி வைத்துக் கொண்டு சாவியைத் தர மாட்டோம்னு சொன்னவங்க தமிழகத்துக்கு செஞ்ச துரோகத்தையும் பேசுங்க மேடம்.


திகழ்ஓவியன்
ஆக 30, 2025 14:01

தமிழ் நாட்டிற்கு தரவேண்டிய கல்வி தொகை தராமல் மறுக்கும் நீங்கள் தமிழகத்துக்கு நடந்த துரோகம் பற்றி பேசுகிறீர்


vivek
ஆக 30, 2025 14:29

30 ஆயிரம் கோடி குடுதாச்சி. கணக்கு வரலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை